மேலும் அறிய
Advertisement
மொட்டையடிக்க 300 ரூபாய்.. ராமேஸ்வரத்தில் காற்றில் பறந்த அரசு உத்தரவு..!
கோவிலில் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்த கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பொது மக்களிடையேயும் பக்தர்களிடையேயும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள கோயில்களில் மொட்டையடிக்க இனி கட்டணம் வசூலிக்கப்படாது என பேரவையில் இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். 2021 - 2022 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கைகள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது , இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், தமிழகத்தில் உள்ள அறநிலையத் துறையின் கீழ் இருக்கும் எந்தக் கோயிலிலும் இனி, மொட்டை அடிக்க பக்தர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படாது என்று அறிவித்தார். ஆனால் இன்று மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் வந்த பக்தர்கள் மொட்டை அடிக்க 300 ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
'அரசு உத்தரவுக்கு போடப்பட்ட மொட்டை'
இன்று மகாளய அமாவசை என்பதால் ராமேஸ்வரத்திற்கு வந்திருந்த பக்தர்கள் தங்களின் முன்னோர்களை வழிபட்டு பின் மொட்டை போட்டு கொண்டனர். பக்தர்களுக்கு மொட்டை போட 200 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை கட்டணமாக கட்டாய வசூல் செய்யப்பட்டுள்ளது. மொட்டை போட அரசு இலவசம் என அறிவித்துள்ளதே எனக் பக்தர்கள் கேட்டதற்கு அக்னி தீர்த்த கடற்கரையில் போட்டால்தான் இலவசம் என்றும் மற்ற இடங்களில் போட்டால் காசு கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.செய்வதறியாத பக்தர்கள் கேட்ட தொகையைக் கொடுத்துவிட்டு மனவேதனையுடன் சொந்த ஊருக்குச் திரும்பி சென்றனர்.
'கோவில் நிர்வாகம் பதில்'
இந்நிலையில் அப்பகுதியில் பணியில் இருந்த காவலர்கள், அதிக கட்டணம் வசூல் குறித்து மொட்டை போடும் நபர் (சவரத்தொழிலாளி) களிடம் கேட்டதற்கு பதில் கூறாமல் அங்கிருந்து வேறு பகுதிக்கு சென்று அதே கட்டணத்தை வசூல் செய்து மீண்டும் வேறு நபர்களுக்கு மொட்டை போட்டு உள்ளார். இதுகுறித்து திருக்கோவில் நிர்வாகத்திடம் கேட்டபோது, திருக்கோவில் பணியாளர்கள் யாரும் இன்று மொட்டை போடவில்லை, வெளி நபர்கள் சிலர் மொட்டை போட்டுள்ளனர். இனிவரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நடக்காது எனவும் அது போன்ற தவறுகள் நடைபெறுவதாகத் தகவல் வந்தால் காவல்துறை மூலம் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இந்து அறநிலைத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக, இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தால் அவைகள் அனைத்தும் பாரபட்சமின்றி மீட்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று திருக்கோயில்களில் முடிகாணிக்கை செலுத்த இனி கட்டணம் வசூலிக்க கூடாது என அறிவித்ததும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்த நிலையில், இன்று ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்த கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பொது மக்களிடையேயும் பக்தர்களிடையேயும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - 'என் தங்கத்த காணோமே’ : 60 நாய்களுக்கு சரணாலயம்.. வீட்டைச்சுற்றியே சமாதிகள்.. ஆச்சரியம் தரும் முதியவரின் கதை !
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion