மேலும் அறிய
Advertisement
Madurai: தேவர் ஜெயந்தி விழா: முதலமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வருகை- ட்ரோன்களுக்கு 2 நாட்கள் தடை!
நாளை மறுநாள் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.
தேவர் ஜெயந்தி விழா, முதலமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வருகையால் மதுரை மாநகரில் ட்ரோன்கள் பறக்க 2 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தேவர் ஜெயந்தி
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொனில் வாழ்ந்து மறைந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதை முன்னிட்டு கடந்த 2014 ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட 13 கிலோ தங்கக் கவசம், மதுரை அண்ணாநகர் பகுதியில் இருக்கக்கூடிய பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் உள்ளது.
அதிமுக பொறுப்பாளராக இருக்கக்கூடிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நினைவிட பொறுப்பாளர் காந்தி மின்னல், வங்கி மேலாளர்கள் ஆகியோர் கையொப்பமிட்ட பிறகு, முத்துராமலிங்கத் தேவர் நினைவிடப் பொறுப்பாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் தங்க கவசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்போடு வாகனம் பசும்பொன்னுக்குக் கொண்டு செல்லப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம்
இந்நிலையில் நாளை மறுநாள் 30-ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவினை முன்னிட்டு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன், மாநகர காவல் ஆணையர் லோகநாதன், மாவட்ட எஸ்.பி. சிவபிரசாத், மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தேவர் சிலை மற்றும் தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருதுபாண்டியர் சிலை அருகே மக்களுக்கான தண்ணீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரிவர செய்து தர வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆலோசனை கூறினார்.
தீவிரப் பாதுகாப்பு
தொடர்ந்து சிலைக்கு மாலை அணிவிக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் , அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் வர இருப்பதால் அவர்களது பாதுகாப்பு குறித்தும் காவல் அதிகாரிகளிடம் ஆலோசனை செய்யப்பட்டது.
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழக முதல்வர் மற்றும் அனைத்து கட்சி முக்கிய பிரமுகர்கள் வருகையொட்டி மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தேவர் சிலை மற்றும் மாரியம்மன் தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மருது பாண்டியர்கள் சிலை உள்ளிட்ட மாநகர் பகுதியில் நாளையும், நாளை மறுநாளும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவுக்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வர உள்ளார். சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்து, மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக செல்ல உள்ள அவருக்கு வரவேற்பு வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - TN Rain Alert: வரும் 29 மற்றும் 30ம் தேதியில் கொட்டப்போகும் கனமழை - எந்தெந்த பகுதிகளில்? மழை நிலவரம் இதோ!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
திரை விமர்சனம்
அரசியல்
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion