பழனி - கொடைக்கானல் சாலையில் இறந்து கிடந்த சிறுத்தை.. வனத்துறை விசாரணை
பழனியிலிருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் சாலையில் இறந்து கிடந்த சிறுத்தையை கடித்து குதறும் காட்டு பன்றிகளின் வீடியோ பரவியது. சிறுத்தை இறப்பு குறித்து வனத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் , பழனி கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் சிறுத்தை, மான், காட்டெருமை, காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் வசித்து வருகின்றன. பழனியில் இருந்து கொடைக்கானலுக்கு செல்லக்கூடிய 60 கிலோமீட்டர் சாலையில் இரவு நேரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும். இந்த நிலையில் நேற்று இரவு பழனியிலிருந்து கொடைக்கானல் செல்லும் இரண்டாவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் சாலையை கடக்க முயன்ற சிறுத்தை ஒன்று அடையாளம் தெரியாத வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
தேனி : வெகு விமரிசையாக நடைபெறும் கம்பம் கெளமாரியம்மன் கோவில் திருவிழா..
மதுரை : உச்சப்பட்டியில் 1200 ஆண்டுகள் பழமையான பாண்டியர் கால கிரந்த கல்வெட்டு கண்டெடுப்பு..
சாலையில் இறந்து கிடந்த சிறுத்தை குறித்து, பழனி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், வனத்துறையினர் வருவதற்குள் சாலையில் இறந்து கிடந்த சிறுத்தையை காட்டு பன்றிகள் கடித்துக்குதறின. இந்த நிகழ்வை அப்பகுதியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் வீடியோ எடுத்து சமூக வலைதலங்களில் பதிவேற்றியுள்ளனர்.
இதற்குப்பின், சம்பவ இடத்திற்கு வந்த பழனி வனத்துறையினர் சிறுத்தையின் உடலை மீட்டுள்ளனர். மேலும் சிறுத்தை இறப்புக்கு காரணமாக விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த சிறுத்தை ஒரு வயது உடைய பெண் சிறுத்தை எனவும், இரவு நேரத்தில் சாலையை கடக்கும்போது வாகனம் மோதி உயிர் இழந்ததும் வனத்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுத்தை மீது வாகனத்தை மோதியது யார் என்பது குறித்து சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்