மேலும் அறிய
Advertisement
குற்றவியல் நீதிமன்றங்கள் ஆய்வக சோதனை அறிக்கைகள் இல்லை என்பதற்காக இறுதி அறிக்கைகளை திருப்பி அனுப்பக்கூடாது - மதுரை உயர்நீதிமன்றம்
தமிழக காவல்துறை தலைவர் இது தொடர்பான சுற்றறிக்கையை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்பி உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்
பாளையங்கோட்டையை சேர்ந்த நிஷா, தனது தந்தையை கண்டுபிடித்து தருமாறு ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஷ்குமார் அமர்வு, "இந்த வழக்கில் மனுதாரரின் தந்தை குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மனுதாரர் தரப்பில் குண்டாஸ் விதிக்கப்பட்டதை எதிர்த்து, அது தொடர்பான மேல்முறையீட்டு குழுவில் மனு அளித்த நிலையில், அரசுத்தரப்பில் குறிப்பிட்ட காலத்திற்குள் பரிசீலிக்கவில்லை"என வாதிடப்பட்டது. அரசுத் தரப்பில், "கால தாமதம் செய்ததாகவும், குறிப்பிட்ட காலத்திற்குள் பரிசீலிக்கவில்லை என்பதாலும் குண்டாஸை ரத்துசெய்ய முடியாது. இதில் எவ்விதமான உரிமை மீறலும் இல்லை" என வாதிடப்பட்டது.
கடந்த 2021 ஜூலை 31ஆம் தேதி, மனு அளிக்கப்பட்ட நிலையில் 41 நாட்கள், அரசு விடுமுறை போக 22 நாட்கள் தாமதமாக மனுவை நிராகரித்துள்ளனர். அந்த கால தாமதத்திற்கு முறையான விளக்கம் அளிக்கப்படவில்லை. இதுபோன்ற கால தாமதங்கள் சட்டவிரோதமானவை என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த வழக்கை பொறுத்த வரை 41 நாட்கள் காரணமின்றி காலதாமதம் என்பதால் இந்த உத்தரவை ரத்து செய்யலாம். ஆகவே மனுதாரரின் தந்தை ராஜபாண்டியன் மீதான குண்டாஸ் ரத்து செய்யப்படுகிறது. இந்த வழக்கில் இறுதி அறிக்கை 90 நாட்களுக்கு பின்பாகவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பல வழக்குகளில் இதுபோல கீழமை நீதிமன்றங்களில் தாமதமாகவே இறுதி அறிக்கைகள் தாக்கல் செய்யப்படுகின்றன.இதனால் கொடூரமான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் எளிதாக ஜாமின் பெற்றுவிடுகின்றனர்.
ஆகவே குறிப்பிட்ட காலத்திற்குள் இறுதி அறிக்கைகளை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிடுகிறது.இந்த உத்தரவு குண்டாஸ் தொடர்பான வழக்குகளுக்கும் பொருந்தும். சில வழக்குகளில் டிஎன்ஏ சோதனை அறிக்கை, ரசாயன சோதனை அறிக்கை போன்ற ஆய்வக சோதனையின் அறிக்கைகள் இல்லை என்பதற்காக கீழமை நீதிமன்றங்கள் இறுதி அறிக்கையை திருப்பி அனுப்புவதாகக் கூறப்படுகிறது. குற்றவியல் விதிகள் அதுபோல இறுதி அறிக்கையை திருப்பி அனுப்பக் கூடாது என்பதை உறுதிப்படுத்துகிறது. ஆகவே கீழமை நீதிமன்றங்களில், குறிப்பாக குற்றவியல் நீதிமன்றங்கள் இதுபோல ஆய்வகம் தொடர்பான ஆய்வு அறிக்கைகள் இல்லை என்பதற்காக இறுதி அறிக்கைகளை திருப்பி அனுப்பக்கூடாது. இந்த உத்தரவை கீழமை நீதிமன்றங்கள் முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழக காவல்துறை தலைவர் இது தொடர்பான சுற்றறிக்கையை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்பி உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். பதிவுத்துறை இந்த உத்தரவை தலைமை நீதிபதி முன்பாக சமர்ப்பித்து, இதுதொடர்பாக கீழமை நீதிமன்றங்களில் சுற்றறிக்கை அனுப்புவது குறித்து முடிவெடுக்க வேண்டும்" என உத்தரவிட்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion