மேலும் அறிய

Crime: பட்டப்பகலில் வீடு புகுந்து கணவர் வெட்டிக்கொலை: மனைவி கண்முன்னே நேர்ந்த கொடூரம்

பட்டப்பகலில் வீடு புகுந்து கட்டிட தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம், திண்டுக்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் அருகே உள்ள பொன்மாந்துறை புதுப்பட்டியை சேர்ந்தவர் இருளப்பன் என்ற ராசு (40). இவர் அப்பகுதில் கட்டிட வேலைகளுக்கு சென்று வந்துள்ளார். அவருடைய மனைவி ஹேமலதா (40). இந்த தம்பதிக்கு ரம்யா கிருஷ்ணன் (21), ரஞ்சனி (17) என்ற 2 மகள்களும், கணேசன் (19) என்ற மகனும் உள்ளனர்.

இதில், ரம்யா கிருஷ்ணன் திருமணமாகி கணவருடன் மணப்பாறையில் வசித்து வருகிறார். பிளஸ்-2 படிக்கிற ரஞ்சனி, நேற்று பள்ளிக்கு சென்று விட்டார். பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் தங்கியிருந்து கணேசன் படித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று ஹேமலதாவும், ராசுவும் வீட்டில் இருந்தனர். ராசு ஒரு வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருந்தார். ஹேமலதா வீட்டு வேலை செய்து கொண்டிருந்தார். மதியம் 2.30 மணி அளவில் 6 பேர் கொண்ட கும்பல் ராசு வீட்டுக்கு வந்தனர்.

Crime: பட்டப்பகலில் வீடு புகுந்து கணவர் வெட்டிக்கொலை: மனைவி கண்முன்னே நேர்ந்த கொடூரம்

திடீரென அவர்கள் வைத்திருந்த அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீட்டு அறைக்குள் புகுந்தனர். இதனைக்கண்ட ஹேமலதா அதிர்ச்சி அடைந்து அவர்களை தடுக்க முயன்றார். ஆனால் அந்த கும்பலை சேர்ந்தவர்கள், அவரை கீழே தள்ளி விட்டு தூங்கிக் கொண்டிருந்த ராசுவை சரமாரியாக வெட்டினர். இதனால் திடுக்கிட்டு விழித்த ராசு, அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றார். இருப்பினும் அவர்கள் சுற்றி வளைத்து தலையை குறி வைத்து வெட்டி சாய்த்தனர். இதில் ராசுவின் முகம் சிதைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். தனது கண் எதிரே கணவரை வெட்டிக்கொலை செய்ததை கண்டு ஹேமலதா அலறினார். அந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் கொலை வெறி கும்பலை சேர்ந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

Crime: பட்டப்பகலில் வீடு புகுந்து கணவர் வெட்டிக்கொலை: மனைவி கண்முன்னே நேர்ந்த கொடூரம்

இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா  காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் கொலை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதேபோல் சம்பவ இடத்தில் பதிவான ரேகைகளை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர். போலீஸ் மோப்பநாய் டிம்பி வரவழைக்கப்பட்டது. அது, கொலை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி சென்றது.

Maamannan: ‘படத்தால் சாதி ஒழிப்பு சாத்தியமில்லை’ .. மாமன்னன் சர்ச்சை குறித்து விசிக விக்ரமன் கருத்து..!

இதற்கிடையே ராசுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ராசுவுக்கும், அவரது உறவினருக்கும் இடப்பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் ராசு தீர்த்துக்கட்டப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதி விசாரணையை  தீவிரப்படுத்தியுள்ளனர்.  இது தொடர்பாக தனிப்படை அமைத்து 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வீடு புகுந்து கட்டிட தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம், திண்டுக்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
New Car Launch: ஜனவரியில் களைகட்டப்போகும் கார் சந்தை.. 7 மாடல்கள், வரிசை கட்டும் ப்ராண்ட்கள் - விலை, தேதி?
New Car Launch: ஜனவரியில் களைகட்டப்போகும் கார் சந்தை.. 7 மாடல்கள், வரிசை கட்டும் ப்ராண்ட்கள் - விலை, தேதி?
TVK Vijay alliance: விஜய்யின் கனவில் மண்ணை அள்ளிப்போட்ட பாஜக.? கூட்டணி பிளானில் திடீர் ட்விஸ்ட்
விஜய்யின் கனவில் மண்ணை அள்ளிப்போட்ட பாஜக.? கூட்டணி பிளானில் திடீர் ட்விஸ்ட்
TVK Vijay : திமுகவின் வாக்குகளை அள்ள விஜய் போட்ட செம பிளான்.! தேதி குறித்த தவெக
திமுகவின் வாக்குகளை அள்ள விஜய் போட்ட செம பிளான்.! தேதி குறித்த தவெக
Top 10 News Headlines: நெல்லையில் ஸ்டாலின், மோடி சூளுரை, விஜய் கொண்டாட்டம், இங்., பரிதாபம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: நெல்லையில் ஸ்டாலின், மோடி சூளுரை, விஜய் கொண்டாட்டம், இங்., பரிதாபம் - 11 மணி வரை இன்று
Embed widget