மேலும் அறிய
Advertisement
மதுரை விமான நிலையத்தில் நாளை முதல் கொரோனா பரிசோதனைகள் மீண்டும் தொடக்கம்
விமான நிலையத்திற்குள் வரும் பயணிகளுக்கு இரண்டு கொரோனா தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும். அல்லது கொரோனா இல்லை என சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்திருப்பதை அடுத்து உலக நாடுகள் தீவிர தடுப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ள நிலையில், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
மாநில சுகாதாரத் துறை அறிவுறுத்தலின்படி மதுரையில் சுகாதாரத் துறை இணை இயக்குநர் அர்ஜுன் குமார் உத்தரவின்படி மதுரை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகள் நாளை முதல் செயல்படுத்தப்பட உள்ளது.
மதுரை விமான நிலைய உள்வளாகத்திற்குள் வருபவர்களுக்கு 2 தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் அல்லது கொரோனா இல்லை என சான்று வைத்திருக்கவேண்டும். முகக் கவசம் அணிந்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மதுரை விமான நிலையத்தில் சிங்கப்பூர், இலங்கை, துபாய், சார்ஜாவில் இருந்து விமான நிலையத்திற்கு வெளிநாடுகளிலிருந்து பயணிகள் அதிகளவு மதுரை வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் புதிய வகை கொரோனா வைரஸ் BF7 எனப்படும் கொரோனா வேகமாக பரவி வருவதால் அதனை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையத்தில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொரோனா பரிசோதனை மீண்டும் நாளை முதல் தொடங்கும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதன்படி விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் 2% சத அடிப்படையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இதில் பாசிட்டிவ் என தெரிந்தால் விமானத்தில் பயணம் செய்த அனைத்து பயணிகளின் முகவரியில் உள்ள மாவட்டங்களுக்கு தகவல் அனுப்பி அனைத்து பயணிகளுக்கும் பரிசோதனை செய்யப்படும் என கூறப்படுகிறது.
தற்போது விமான நிலையத்திற்குள் வரும் பயணிகளுக்கு இரண்டு கொரோனா தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும். அல்லது கொரோனா இல்லை என சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முக கவசம் அணிந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion