தேனி: 24 பேருக்கு கொரோனா; திண்டுக்கல்: 23 பேருக்கு கொரோனா!
கடந்த சில தினங்களாக கொரோனா நோய் தொற்றால் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் இன்று திண்டுக்கல்லில் ஒருவர் நோய் தொற்றால் உயிரிழந்துள்ளார்.
திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தில் கடந்த மாதத்தை பொருத்த வரையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் இந்த மாத ஆரம்பித்திலிருந்தே குறைந்துகொண்டே வருகிறது. சென்ற மாதத்தில் தேனி மற்றும் திண்டுக்கல் இரு மாவட்டங்களில் நோய் தொற்றானது தினசரி நூற்றுக்கும் கீழ் இருந்து வந்தது. தற்போது நோய் தொற்றின் பாதிப்பு இரு மாவட்டங்களிலும் நூற்றுக்கும் பகுதியாக குறைந்து தினசரி முப்பதுக்கு கீழ் குறைந்துள்ளது. கடந்த மாதத்தை ஒப்பிடுகையில் இந்த மாத ஆரம்பத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் கடந்த சில தினங்களாக உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது. நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த மாத தொடக்கத்தில் ஜீலை 3ம் தேதியில் கொரோனா நோயின் பாதிப்பு 31 ஆகவும், 4ம் தேதி 34 பேரும் கொரோனா நோய் தொற்றால் பாதிப்படைந்திருந்தனர்.
அன்றைய தேதியில் நோய் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 602 ஆக இருந்தது. இதனை தொடர்ந்து தினசரி கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் இரு மாவட்டங்களிலும் எண்ணிக்கை 30க்கும் கீழ் இருந்து வந்த நிலையில் தற்போது கடந்த சில தினங்களாக நோய் தொற்றின் பரவல் குறைந்து வந்திருந்தாலும் உயிரிழப்புகள் திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது. திண்டுக்கல் சுகாதார மாவட்டத்தில் மட்டும் இன்று வரையில் மொத்தம் 2 லட்சத்து 58 ஆயிரத்து 431 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் பின்பு தடுப்பூசிகள் கிடைப்பதில் தட்டுப்பாடு இருந்த நிலையில் அடுத்து வரும் நாட்களில் மீண்டும் தடுப்பூசிகள் முறையாக செலுத்தப்பட்டது. அதே போல் பழனி சுகாதார மாவட்டத்தில் இன்று வரையில் 1 லட்சத்து 93 ஆயிரத்து 350 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 23 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31912-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் இன்று 21 நபர்கள் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 31068-ஆக குறைந்துள்ளது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 614 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 230 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் திண்டுக்கல் மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இன்று நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
அதே போல் தேனி மாவட்டத்தில் இன்று 24 நபர்களுக்கு நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42722 -ஆக உயர்ந்துள்ளது. அதே போல் இன்று மட்டும்29 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 41891-ஆக குறைந்துள்ளது. தற்போது வரையில் தேனி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 508 ஆக இருக்கிறது. இன்று 323 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் தேனி மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். தேனி மாவட்டத்தில் இன்று உயிரிழப்புகள் ஏதும் இல்லை.