மேலும் அறிய
Advertisement
அனைத்து வார்டு பகுதிகளிலும் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்வேன் - அமைச்சர் மூர்த்தி
மாநகராட்சியில் உள்ள நூறு வார்டு பகுதிகளிலும் ஆய்வு மேற்கொள்வேன். இதே போன்று புறநகர் பகுதிகளிலும் நேரில் சென்று பொதுமக்கள் பிரச்னைகளுக்கு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவேன் என்றார்.
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சங்கீத் நகர் ஆனையூர், தபால்தந்தி நகர், கோசகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி பாதாள சாக்கடை அமைப்பு பணிகள், சாலை சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் குறித்து நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாநகராட்சி மேயர் இந்திராணி மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங் காலோன், உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். அமைச்சர் ஆய்வு மேற்கொண்ட பொழுது பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு சாலைகள் காணப்பட்டதால் அதிகாரிகளுக்கு உடனடியாக சாலைகளை சீரமைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆனையூர் பகுதி குடியிருப்பு பகுதியில் மழை நீர் தேங்கிய இடங்களை பார்வையிட்டு மழை நீரை உடனடியாக வெளியேற்றவும், குடியிருப்பு பகுதிகளுக்கு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்திக் கொடுக்கவும்,(1/2) pic.twitter.com/BtN2mgsA4v
— P Moorthy (@pmoorthy21) November 5, 2022
தொடர்ந்து பாதாள சாக்கடை அமைப்பு பணிகள் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளை விரைவுபடுத்தவும் அறிவுறுத்தினார். அதேபோன்று பாதாள சாக்கடை பணி மேற்கொள்ளும் போது தற்காலிகமாக சாலைகளை அமைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி ஒவ்வொரு பகுதிகளிலும் சாலைகளில் தேங்கிய மழை நீரில் நடந்து சென்று ஆய்வுகளை மேற்கொண்டார் . மேலும் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களை சந்தித்து அவர்களுடைய குறைகளை கேட்டறிந்து விரைவில் சாலைகள் சீரமைக்கப்படும் என தெரிவித்தார்.
இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர்: தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் மக்கள் சந்திக்க கூடிய பிரச்னைகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டோம் விரைவில் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் இந்த தொகுதி போன்றே மாநகராட்சியில் உள்ள நூறு வார்டு பகுதிகளிலும் ஆய்வு மேற்கொள்வேன் இதே போன்று புறநகர் பகுதிகளிலும் நேரில் சென்று பொதுமக்கள் பிரச்னைகளுக்கு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவேன் என்றார்.
அதே போல் மதுரை பாலமேடு அருகே உள்ள 29 அடி கொள்ளளவு கொண்ட சாத்தையாறு முழுமையான அளவில் நிரம்பி உள்ளது. மழை காரணமாக அணையின் நீர்பிடிப்பு பகுதியான வகுத்து மலை, செம்பூத்துமலை, சிறுமலை தொடர்ச்சி, மற்றும் மஞ்சமலை பகுதிகளில் இருந்து கடந்த சில நாட்களாக பெய்து வந்த தொடர் மழையால் அணை முழுவதுமாக நிரம்பி ஏற்கனவே அணைநீர் மறுகால் பாய்ந்து வரும் நிலையில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி சாத்தையார் அணையை பார்வையிட்டார். மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
தொடர்ந்து 20 நாட்களுக்கு முன்பு கனமழையின் காரணமாக ஓடை பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் எதிர்பாராத விதமாக சிக்கி உயிரிழந்த வாடிப்பட்டி டி. மேட்டுப்பட்டி கிராமத்தைச் சார்ந்த 47 வயதான காயாம்பு என்பவரது குடும்பத்தாருக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூபாய் 4 லட்சம் நிவாரண உதவித் தொகைக்கான காசோலையை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion