மேலும் அறிய

காஞ்சிபுரம் பட்டு முதல் காட்டன் சேலை வரை அதிரடி ஆஃபர்- எங்கு தெரியுமா?

மகளிருக்காக சுடிதார் ரகங்கள், நைட்டிகள் மற்றும் குர்தீஸ்கள் கண்ணைக் கவரும் வண்ணங்களில் வாடிக்கையாளர்களுக்காக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை வெங்கலக்கடைத் தெருவில் அமைந்துள்ள கோ-ஆப்டெக்ஸ் அங்கயற்கண்ணி விற்பனை நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, கோ-ஆப்டெக்ஸ்ரமலான் மற்றும் ஆண்டு இறுதி 30% சிறப்புத் தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்தார்.
 
தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம்
 
தொடர்ந்து, மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா தெரிவித்ததாவது..,” கோ-ஆப்டெக்ஸ் என அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், 1935-ஆம் ஆண்டில் துவக்கப்பட்டு தொடர்ந்து 90 ஆண்டுகளாக தமிழ்நாட்டிலுள்ள கைத்தறி நெசவாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான முறையில் சேவை புரிந்து வருகிறது.
 
சேலை வகைகள் என்ன இருக்கிறது
 
கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் காஞ்சிபுரம் பட்டு, சேலம் பட்டு, திருப்புவனம் பட்டு, கோயம்புத்தூர் மென்பட்டு சேலைகள் கண்டாங்கிச் சேலைகள், கைத்தறி சுங்கிடி சேலைகள், காஞ்சி காட்டன், கோவை கோரா காட்டன், சேலம் காட்டன், பரமக்குடி காட்டன், திண்டுக்கல் காட்டன், அருப்புகோட்டை காட்டன் மற்றும் ஆர்கானிக் காட்டன் சேலை ரகங்கள் ஏராளமாக தருவிக்கப்பட்டுள்ளன. மேலும் நவீன யுக ஆடவர்களை கவரும் விதமாக லினன் பருத்தி (Linen/Cotton) சட்டைகள், காட்டன் சட்டைகள், லுங்கிகள் மற்றும் வேட்டிகள் உள்ளன. மேலும் மகளிருக்காக சுடிதார் இரகங்கள், நைட்டிகள் மற்றும் குர்தீஸ்கள் கண்ணைக் கவரும் வண்ணங்களில் வாடிக்கையாளர்களுக்காக தருவிக்கப்பட்டுள்ளது.
 
இணைய தளத்தின் மூலமும் பெற்றுக் கொள்ளலாம்
 
கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகரிக்க ரமலான் தினத்தினை முன்னிட்டு பட்டு, பருத்தி போன்ற அனைத்து ரகங்களுக்கும் 20.03.2025 முதல் 31.03.2025 வரை 30% சிறப்புத் தள்ளுபடி மற்றும் குறிப்பிட்ட 3 பொருட்களை ஒன்றாக வாங்கினால் 33.3% சிறப்பு தள்ளுபடி (Buy 2 Get 1 Free) அனைத்து கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களிலும் வழங்கப்பட்டு வருகின்றது. கோ.ஆப்டெக்ஸ் ஜவுளி இரகங்களை மின் வணிக வலைதளமான www.cooptex.gov.in என்ற இணைய தளத்தின் மூலமும் பெற்றுக் கொள்ளலாம். ரமலான் மற்றும் ஆண்டு இறுதி சிறப்பு விற்பனையினை முன்னிட்டு 31.03.2020 வரை அனைத்து நாட்களிலும் விற்பனை நிலையம் செயல்படும் என்று என மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா தெரிவித்தார்.
 
நிகழ்ச்சியில் அதிகாரிகள்
 
இந்நிகழ்ச்சியில் மண்டல மேலாளர் S.மாணிக்கம், மேலாளர் (இரகம் & பகிர்மானம்) திரு.R.செந்திவேல், கோ-ஆப்டெக்ஸ் முன்னாள் கோ.ஆப்டெக்ஸ் நிர்வாகக்குழு உறுப்பினர் திரு.ச.க.ஸ்டாலின், மேலாளர் S.பாடலிங்கம், துணை மண்டல மேலாளர், A.தீபா, திரு.K.மணிவண்ணன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ’வீர தீர சூரன்’ வெளியாகாததால் சோகத்தில் சீயான் விக்ரம் ரசிகர்கள்

தலைப்பு செய்திகள்

மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
Embed widget