'தீபாவளிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்காதது நவீன தீண்டாமை' - எல்.முருகன்
’’தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தானாக முன்வந்து பொது மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்’’
தீபாவளி வாழ்த்து தெரிவிக்காத தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கண்டனம்; பிற மதப் பண்டிகைகளுக்கு வாழ்த்துக் கூறும் தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்துக்கள் கொண்டாடும் தீபாவளி திருநாளுக்கு வாழ்த்துக் கூறாததை நவீன தீண்டாமை யாக பார்க்கிறேன். தமிழக முதல்வர் பொது மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் ராமேஸ்வரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள 12 ஜோதி லிங்கங்களில் வடக்கே 11 லிங்கங்கங்களும் தெற்கே ஒரு லிங்கம் இராமேஸ்வரம் இராமநாதசாமி கோவில் என பன்னிரண்டு ஜோதி லிங்கங்கள் உள்ளன, இந்த நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர், 12 அடி உயரம் கொண்ட 35 டன் எடை கொண்ட ஆதிசங்கரர் சிலையை அதனருகே நிருவி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரூபாய் 310 கோடி மதிப்பிலான திட்டங்களையும் பிரதமர் இன்று தொடங்கி வைத்து உரையாற்றினார். இந்த நிகழ்வில் தொலைக்காட்சி வாயிலாக கலந்து கொள்வதற்காக, ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோவிலில் உள்ள திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள திரையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட நிகழ்வுகளை மத்திய இணையமைச்சர் எல். முருகன், பாஜக வை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜகவை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ராமேஸ்வரம் ஒரு புண்ணிய தலம். இந்த இடத்திலிருந்து சொல்கிறேன் நேற்று இந்தியா முழுவதும், உலகம் முழுதும் இருக்கிற இந்துக்கள் தமிழர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர், அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டுவதற்காக தீபாவளியை கொண்டாடுகிறோம் ஒவ்வொரு தமிழரும் கொண்டாடி கொண்டிருக்கிறோம் அப்படிப்பட்ட திருவிழாவிற்கு முதலமைச்சர் அவர்கள் வாழ்த்து தெரிவிக்காதது மிகவும் வன்மையாக கண்டிக்க தக்கது. இது ஓரவஞ்சம் என்றே சொல்வார்கள் ஒரு மதத்தை சார்ந்தவர்களுக்கு வாழ்த்து சொல்வது பெரும்பான்மையான இந்து சமுதாயம் இருக்கின்ற தமிழர்கள் கொண்டாடுகின்ற திருவிழாவிற்கு வாழ்த்து சொல்லாமல் புறக்கணிப்பதை நவீன தீண்டாமையாக பார்க்கின்றேன், இதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தானாக முன்வந்து பொது மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்த அவர், பாரத பிரதமர் பெட்ரோல் டீசல் விலையை குறைத்து இந்தியாவில் மக்களுக்கு தீபாவளி பரிசு வழங்கியுள்ளார்.
மேலும், பாரதிய ஜனதா ஆட்சி செய்கின்ற மாநிலங்களில் வாட் வரியை குறைத்து பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டீசல் பெட்ரோல் விலையைக் உழைப்போம் என தெரிவித்தார்கள். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை தற்போது மத்திய அரசு குறைத்துள்ளது உடனடியாக தமிழக அரசு உடனடியாக வாட் வரியை குறைக்க முன்வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.