மேலும் அறிய
Advertisement
ரூ.20 இருந்தால் ஒரு நாள் முழுவதும் அம்மா உணவகத்தில் உணவருந்தி விடலாம் - நீதிபதிகள்
வனப்பகுதியை சுத்தம் செய்ய தேவையான நிதியை அரசிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாமே - நீதிபதிகள்
ஸ்ரீவில்லிபுத்தூர், செண்பகத்தோப்பு வன பகுதியில் கல்யாண சுந்தரவல்லி, சௌந்தரவல்லி சமேத சுந்தரராஜப்பெருமாள் (எ) கட்டழகர் கோவிலுக்கு செல்ல வனத்துறையினரால் ரூ.20 வசூலிக்கப்படுவதற்கு தடைவிதிக்க கோரிய வழக்கில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர், விருதுநகர் வன காவலர் ஆகியோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
விருதுநகரை சேர்ந்த ஆனந்தகுமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொது நல மனுவில், "விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், செண்பகத்தோப்பு வன பகுதியில் அருள்மிகு கல்யாண சுந்தரவல்லி, சௌந்தரவல்லி சமேத அருள்மிகு சுந்தரராஜப்பெருமாள் என்கிற கட்டழகர் கோவில் அமைந்துள்ளது.
இக்கோயில் மிக பிரசித்தி பெற்றது. புரட்டாசி மாதங்களில் இங்கு விழாக்கள் மற்றும் அன்னதானங்கள் நடைபெறும். இக்கோயிலுக்கு சென்று வர பல வருடங்களாக எந்த கட்டணமும் வசூல் செய்யப்படவில்லை.
ஆனால், தற்போது இக்கோயிலுக்கு செல்ல வனப்பகுதிகளில் நபர் ஒன்றுக்கு ரூ.20 வீதம் வனத்துறையினரால் வசூலிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
எனவே, ஸ்ரீவில்லிபுத்தூர், செண்பகத்தோப்பு வன பகுதியில் அருள்மிகு கல்யாண சுந்தரவல்லி, சௌந்தரவல்லி சமேத அருள்மிகு சுந்தரராஜப்பெருமாள் என்கிற கட்டழகர் கோவிலுக்கு செல்ல வனத்துறையினரால் ரூ.20 வசூலிக்கப்படுவதற்கு தடைவிதித்து உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில், வனப்பகுதியை சுத்தம் செய்வதற்காகவே ரூ. 20 வசூல் செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், வனப் பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் தங்கள் பொறுப்புகளையும் கடமைகளையும் உணர்ந்து செயல்பட வேண்டும் என கருத்து தெரிவித்தனர். மனுதாரர் தரப்பில், அன்னதானம் சாப்பிட வரும் ஏழை பக்தர்களிடம் ரூ.20 வசூல் செய்கின்றனர். என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள், ரூ.20 இருந்தால் ஒரு நாள் முழுவதும் அம்மா உணவகத்தில் உணவருந்தி விடலாம். மேலும் வனப்பகுதியை சுத்தம் செய்ய தேவையான நிதியை அரசிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாமே என கருத்து தெரிவித்த நீதிபதிகள், வழக்கு குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர், விருதுநகர் வன காவலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை அக்டோபர் 13ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
மற்றொரு வழக்கு
திருசெந்தூர் கோவில் அருகே ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான சொத்தை மீட்டு ஒப்படைக்க கோரிய வழக்கில், உரிய ஆவணங்களுடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உதவி ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த மார்க்கண்டன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளைகள் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடு. நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே உள்ளது. ஆதினத்திற்கு சொந்தமான சொத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற மறுக்கின்றனர்.
தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான திருச்செத்தூரில் உள்ள 3.5 ஏக்கர் சொத்தை மீட்டு உடனடியாக ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பை அகற்றி ஆதினத்திற்குச் சொந்தமான சொத்தைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க இந்து சமய அறநிலையத்துறை க்கு உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், ஆதினத்திற்கு சொந்தமான சொத்துகளுக்கு 1971 வரை வாடகை செலுத்தி வந்தனர். அதன்பிறகு, முறைகேடாக பத்திரவு செய்து பட்டா செய்து விட்டனர். எனவே, தருமபுரம் ஆதின மடத்தின் சொத்துகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து நீதிபதிகள், திருச்செந்தூர் கோவில் அருகே உள்ள ஆதினமடத்தின் சொத்துகள் குறித்த ஆவனங்களுடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உதவி ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டார் .
ஆக்கிரமிப்பு செய்திருந்தால் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என கூறி வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
சென்னை
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion