மேலும் அறிய

தாமிரபரணி ஆற்றின் பெயர் மாற்றம் வழக்கு - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மொழியியல் நிபுணர்களின் கருத்துக்கள் மற்றும் உரிய ஆவணங்களுடன்  பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

தாமிரபரணி ஆற்றின் பெயரை பொருநை நதி என பெயர் மாற்றம் செய்யக்கோரிய வழக்கில், மொழியியல் நிபுணர்களின் கருத்துக்கள் மற்றும் உரிய ஆவணங்களுடன்  பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துகுடியைச் சேர்ந்த பொன்காந்திமதிநாதன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில் " பொதிகை மலையில் உற்பத்தியாகி, நெல்லை மாவட்டம் வழியாக மன்னார் வளைகுடா கடலில் கலப்பது தாமிரபரணி ஆறு. தாமிரபரணி என்பது வடமொழிச் சொல். தாமிரபரணி ஆறு முன்னதாக பொருநை நதி எனும் தமிழ்ப்பெயரால் வழங்கப்பட்டுள்ளது. திருவிளையாடல் புராணம், மங்கல நிகண்டு, முக்கூடற்பள்ளு, பெரிய புராணம் என பல தமிழ் இலக்கியங்களில் பொருநை நதி எனும் பெயரே வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு அகழ்வாராய்ச்சியாளர்களும், தமிழறிஞர்களும் இதனை உறுதி செய்துள்ளனர். தாமிரபரணி என்பது வடமொழிச்சொல் அதற்கு மாற்றாக தூய தமிழ் பெயரான பொருநை நதி என 
மாற்றம் செய்யக் கோரி தமிழக தலைமைச் செயலருக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆகவே  தாமிரபரணியின் பெயரையும் பொருநை நதி என பெயர் மாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன்,  சத்தியநாராயண பிரசாத் அமர்வு, இந்த வழக்கு முக்கியமானது என குறிப்பிட்டு, அரசுத்தரப்பில் மொழியியல் நிபுணர்களின் கருத்துக்களையும் கேட்டு, வழக்கு குறித்து உரிய ஆவணங்களுடன் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை இரு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

 


மற்றொரு வழக்கு

மதுரை மாநகர் பகுதியில் விதி மீறி இயக்கிய ஆட்டோக்களிடம்  2 கோடி ரூபாய் அபராதம் வசூலித்ததாக உயர் நீதிமன்றத்தில் மதுரை காவல்துறை ஆணையர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

மதுரை மாவட்ட மினி பஸ் உரிமையா ளர்கள் சங்கம் சார்பாக ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு இடங்களில் ஆட்டோக்களை நிறுத்தி, பயணிகளை ஏற்றி, இறக்குகின்றனர். இதனால் பயணிகள் பெரும் பாதிப்பை சந்திக்கின்றனர். பல நேரங்களில் விபத்து களும் ஏற்படுகின்றன. எனவே, இவற்றை தவிர்க்க ஆட்டோவில் பயணிகளை ஏற்றி, இறக்க தனி இடம் ஒதுக்கித் தருமாறு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி கள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் முன்  விசாரணைக்கு வந்தது. மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக மதுரை மாநகர காவல்துறை ஆணையர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில்  விதி முறைகளை மீறி இயக்கப்படும் ஆட்டோக்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது 2013 முதல் 17 வரை அதிக ஆள் ஏற்றியதாக 27751 மீட்டர் இல்லாமல் இயக்கியதாக 10286 ஆட்டோ சீட் மாற்றி அமைத்து இயக்கியதாக 2354  மேலும் பல்வேறு விதிகளை மீறியது என  மொத்தம் 156468 வழக்கு  பதிவ பதியப்பட்டது. இதில் அபராத தொகையாக 2 கோடி ருபாய்  வசூலிக்கப்பட்டுள்ளது .மேலும் மதுரை மாநகர் முழுவதும் 113 ஆட்டோ நிறுத்தும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளது முறையான அனுமதி உடன் 1911 ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது என்றும் தொடர்ந்து விதிமுறைகளை மீறும் ஆட்டோக்களை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதேபோல் வட்டார போக்குவரத்து சார்பில் கடந்த 2013 முதல் 2017ம் ஆண்டு வரையில் விதிமீறியது  தொடர்பாக 1,412 ஆட்டோக்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இதில், வழக்கு பதியப்பட்ட 694 ஆட் டோக்களின் பெர்மிட் ரத்து செய்யப்பட்டது. 813 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அபராதமாக ரூ.9 லட்சத்து 26 ஆயரத்து 850 வசூலிக்கப்பட்டது. பயணிகளின் சிரமமின்றி பயணம் செய்யவும், விதிமீறலை கட்டுப்படுத்தவும் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்ப டுகிறது என்றார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து  வைத்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget