மேலும் அறிய
Advertisement
தேனி - கண்ணீரில் பன்னீர் திராட்சை விவசாயிகள்..! விலையின்மையை விவரித்து வேதனை..!
தேனி மாவட்டம் கம்பத்தில் எந்த கால சூழலுக்கும் ஏற்றவாறு விளையும் கருப்பு பன்னீர் திராட்சை விலை சரிந்துள்ளது.
தமிழக கேரள எல்லையை இணைக்கும் முக்கிய மாவட்டமான தேனி மாவட்டத்தில் நெல், திராட்சை, தென்னை, வாழை என அதிக அளவில் விவசாயம் செய்யப்பட்டு வரும் வேளாண் பகுதியாக விளங்குகிறது. கம்பமும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கூடலூர் சுருளிப்பட்டி காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமப்புற பகுதிகளில் மட்டுமல்லாமல் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் எந்த கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு விளையும் மருத்துவ குணங்கள் அடங்கிய கருப்பு பன்னீர் திராட்சை தற்போது விவசாயம் செய்யப்பட்டு விளைச்சலும் நல்ல நிலையில் உள்ளது. ஆனால் வியாபாரம் இன்மையாலும் விலை இன்மையாலும் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இந்தப் பகுதியில் விளையும் கருப்பு பன்னீர் திராட்சை பல்வேறு மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழக கேரள எல்லையை ஒட்டியுள்ள பகுதியாக இருப்பதால், அதிக அளவில் கேரளாவுக்கு திராட்சை அதிக அளவில் ஏற்றுமதியும் செய்யப்பட்டுவரும் நிலையில் ஊரடங்கு விதிகளில் சற்று தளர்வுகள் கொடுக்கப்பட்ட நிலையிலும் இரண்டாம் அலை எதிரொலியால் பல்வேறு தொழில்கள் முடங்கிப்போய் இருந்தாலும் தற்போது பருவ மழை தொடக்கத்தால் திராட்சை சீசன் பாதிப்படைந்துள்ளது.
சென்ற ஊரடங்கு காலங்களிலும் கோடை கால சீசனிலும் அதிகம் விற்பனை ஆகும் திராட்சை வியாபாரமாகாமல் கடுமையான பாதிப்பை சந்தித்தது. இந்நிலையில் தற்போது பருவமழையின் ஆரம்பத்தால் திராட்சை விவசாயம் மீண்டும் சரிவை சந்தித்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ஊரடங்கு தளர்வுகள் கொடுக்கப்பட்ட நிலையிலும் வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை மேலும் கொள்முதல் செய்ய வியாபாரிகள் வருகை குறைவு என பல்வேறு சிக்கல்களில் திராட்சை விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். பொதுவாக கோடைகால சீசனில் திராட்சை விலை கிலோவிற்கு 130 ரூபாய் வரை நல்ல விலைக்கு விற்கப்படும்.
ஆனால் தற்போது கொள்முதல் செய்வதற்கு ஆட்கள் குறைவால் கிலோவிற்கு 40 ருபாய் முதல் 50 ருபாய் வரையில் மட்டுமே திராட்சை விற்பனையாகி வருவதாகவும் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகளும் வியாபாரிகளும் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க:
மேலும் படிக்க:
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
உலகம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion