சீமான் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்ட நிகழ்வில் தமிழ்தாய் வாழ்த்து புறக்கணிக்கப் பட்ட செய்தி தன் கவனத்திற்கு வரவில்லை எனவும் வந்ததும் அதற்கு பதில் அளிக்கிறேன் என தெரிவித்தார்.
கட்டுமான பணிகள் ஆய்வு
சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக ளில் உள்ள பெரியார் நகர் அரசு மருத்துவ மனையில் நவீன வசதிகளுடன் புதிதாக கட்டப் பட்டு வரும் கட்டுமான பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற் கொண்டார்.
இந்நிகழ்வில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.
பின்னர் கொளத்தூர் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள ஜி.கே.எம். காலணியில் உள்ள சுப்பிரமணியன் தெரு வில் வீதி வீதியாக நடை பயணம் மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளை , கோரிக்கைகளை அமைச்சர் சேகர்பாபு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் கேட்டறிந்தனர்.
இறுதியாக திரு.வி.க நகர் சட்டமன்ற தொகுதியில் உள்ள ஓட்டேரி , நியூ பேரன்ஸ் சாலை யில் உள்ள மாநகராட்சி பூங்காவில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு ;
கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் புதிதாக 500 படுக்கை வசதிகள் கொண்ட கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது. எம்.ஆர்.ஐ , CT ஸ்கேன் உள்ளிட்டவற்றை கொண்ட சிறப்பு வாய்ந்த கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
மொத்தமாக 750 படுக்கைகள் கொண்ட நவீன மருத்துவமனையாக இந்த தொகுதியில் சிறந்த மருத்துவமனையாக பெரியார் நகர் அரசு மருத்துவமனை திகழும். DMS கீழே இந்த மருத்துவமனை தற்பொழுது உள்ளது. புதிதாக மேலும் பல்வேறு நலத் திட்டங்கள் இந்த தொகுதியில் செய்யப்பட்டு வருகிறது.
மார்ச் 1 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி மாத இறுதியில் இந்த மருத்துவமனை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டு அர்ப்பணிக்கப்படும்.
இதையும் படிங்க: TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
ஐ போன் உண்டியலில் விழுந்த விவகாரம்
திருப்போரூர் முருகன் கோயிலில் பக்தர் செல்போன் உண்டியலில் விழுந்தது குறித்து இன்று நல்ல முடிவு எடுக்கப்படும். கடந்த ஆட்சி கிள்ளி கொடுக்காத ஆட்சி இந்த ஆட்சி அள்ளிக் கொடுக்கக் கூடிய ஆட்சி என்று அமைச்சர் பேசியிருந்தார்
தமிழ்தாய் வாழ்த்து புறக்கணிப்பு
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்ட நிகழ்வில் தமிழ்தாய் வாழ்த்து புறக்கணிக்கப் பட்ட செய்தி தன் கவனத் திற்கு வரவில்லை என வும் வந்ததும் அதற்கு பதில் அளிக்கிறேன் என தெரிவித்தார்.