மேலும் அறிய
Advertisement
உசிலம்பட்டி அருகே ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு பரத நாட்டிய அரங்கேற்றம்
இந்த பரத நாட்டிய அரங்கேற்றத்தில் சிறப்பு விருந்தினராக உசிலம்பட்டி நடுவர் நீதிமன்ற நீதிபதி மகாராஜன் கலந்துகொண்டார்.
உசிலம்பட்டி அருகே வாலாந்தூர் அங்காள பரமேஸ்வரி திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு பரத நாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது.
#Madurai | மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாலாந்தூர் அங்காள பரமேஸ்வரி திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு பரத நாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது.
— arunchinna (@arunreporter92) January 8, 2023
Further reports to follow @abpnadu@Ns7Senthil143 | @LPRABHAKARANPR3 @HRajaBJP | @Karthikaahari @Hariindic @headBirth_offl pic.twitter.com/tNWd3fTfcL
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாலாந்தூரில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி - வாலகுருநாதர் திருக்கோவில். இந்த கோயிலில் மார்கழி பௌர்ணமி ஆருத்ரா தரிசன வைபோகத்தை முன்னிட்டு கோயிலின் நிர்வாக கமிட்டியினர் மற்றும் உசிலம்பட்டி சங்கர் சங்கீத வித்யாலயா குழு சார்பில் பள்ளி மாணவியர்களின் பரத நாட்டிய அரங்கேற்றம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
7 வயது முதல் 14 வயது கொண்ட மாணவியர்கள் என சுமார் 13 பேர் கலந்து கொண்டு பல்வேறு பரத நாட்டிய பாடல்களுக்கு பரத நாட்டியம் ஆடி அரங்கேற்றம் செய்தனர். இந்த பரத நாட்டிய அரங்கேற்றத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உசிலம்பட்டி நடுவர் நீதிமன்ற நீதிபதி மகாராஜன். அரங்கேற்றத்தில் கலந்து கொண்ட அனைத்து மாணவியர்களுக்கும் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
க்ரைம் தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Crime: திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை தீயிட்டு கொளுத்திய காதலன் - இளம்பெண் உயிரிழப்பு
மேலும் செய்திகள் படிக்க - Rasipalan Today Jan 7: தனுசுக்கு மாற்றம்...துலாமுக்கு கனிவு... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இவை தான்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
மதுரை
கிரிக்கெட்
தமிழ்நாடு
ஆன்மிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion