சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... கேரளாவில் கனமழை எச்சரிக்கை அறிவிப்பு
மத்திய வானிலை மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது சபரிமலையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை 2024 தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு நவம்பர் 16ம் தேதி அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சபரிமலை கோவில் நடைதிறக்கப்பட்ட முதல் நாள் முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.
சபரிமலை மழை எச்சரிக்கை :
சபரிமலை சீசன் ஆரம்பம் ஆனதையடுத்து ஏராளமான பக்தர்கள் சபரிமலை நோக்கி யாத்திரை பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மத்திய வானிலை மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது சபரிமலையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது. வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படும் என்றும், லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மணிக்கு 2 செ.மீ., வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சன்னிதானம், பம்பா, நிலக்கல் ஆகிய பகுதிகளில் மணிக்கு 2 செ.மீ., வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. சன்னிதானம், பம்பா, நிலக்கல் ஆகியவற்றில் உள்ள சபரிமலை பக்தர்கள் மையத்திற்கும் இந்த வானிலை முன்னறிவிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நடுவானில் வந்த மாரடைப்பு! 2 ஆண்டுகளுக்கு பிறகு வீட்டுக்கு வந்த பெண் மரணம் - சோகத்தில் கள்ளக்குறிச்சி
அதே சமயம் மீனவர்களுக்கான எச்சரிக்கையோ, தனிப்பட்ட எந்த மாவட்டத்திற்கான எச்சரிக்கையோ மத்திய வானிலை மையம் வெளியிடவில்லை. இருந்தாலும் சபரிமலை வரும் பக்தர்கள், மழை நிலவரத்தை கருத்தில் கொண்டு கவனமாக தங்களின் சபரிமலை பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சபரிமலை சன்னிதானம் பகுதியில் இன்னும் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை முன்னறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
AR Rahman: நிறைவேறாமல் போன ஆஸ்கர் நாயகன் ஆசை! விவாகரத்து குறித்து மௌனம் கலைத்த ஏ.ஆர்.ரகுமான்!
சபரிமலையில் மழை பெய்து, குளிரான காலநிலை நிலவிய போதிலும் பக்தர்கள் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நவம்பர் 15ம் தேதி மாலை திறக்கப்பட்டு, 16ம் தேதி காலை முதல் தான் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால் நவம்பர் 15ம் தேதி மாலை 4 மணிக்கே கிட்டதட்ட 30,000 பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து, அதிகாலையில் சுவாமி தரிசனம் செய்வதற்காக மலையேற துவங்கி விட்டனர். இந்த ஆண்டு தரிசன நேரத்தை 18 மணி நேரமாக அதிகரித்துள்ளது பக்தர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஆண்டு பக்தர்கள் வசதிக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளும் பக்தர்களின் பாராட்டை பெற்றுள்ளது.