Madurai: ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை சற்று அதிகரிப்பு - நாளை இரு மடங்கு விலை உயர வாய்ப்பு
இன்று முதல் பூக்களின் விலை தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும், மல்லிகைப் பூ ஒரு கிலோ நாளை இருமடங்கு உயர வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
கல்விக்கு அதிபதியாக இருப்பவர் சரஸ்வதி என்று நம்பப்படுகிறது. விஜய தசமி நாளில் சரஸ்வதியை வழிபட்டு முதன்முதலில் படிப்பை தொடங்கும் ‘வித்யாரம்பம்’ நிகழ்வுகள் நடைபெறும். முந்தைய நாள் ஆயுத பூஜை. ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற சொல்லாடல் இருக்கிறது. தொன்மையான விசயங்களில் ஒன்று தொழில் செய்வதற்கு, உயிர் வாழ்வதற்கு ஆதாரமாக இருக்கும் ஆயுதங்களை பூஜித்து வழிபடுவது. இது பழங்காலத்தில் இருந்தே வழக்கமாக உள்ளது.
மேலும் மதுரை மாவட்டம் தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Madurai: நெற்பயிருக்கான இழப்பீட்டு தொகை வழங்கவில்லை; அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பி வெளிநடப்பு செய்த விவசாயி
23-ம் தேதி திங்கள்கிழமையும் மறுநாள் (24.10.2023) விஜய தசமியும் கொண்டாடப்படுகிறது. 23-ம் தேதி அன்று காலை 9 மணி முதல் 10.30 மணி வரையிலும் மதியம் 12க்கு மேல் 1.30 க்குள் பூஜை செய்ய நல்ல நேரம் என ஜோதிட நிபுணர்கள் சொல்கின்றனர். மாலையில் 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் பூஜை செய்யலாம். அதனை தொடர்ந்து இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை பூஜை செய்து இறைவனை வணங்க நல்ல நேரம் ஆகும். ஆயுத பூஜையன்று சரஸ்வதி தேவிக்கும், பார்வதி தேவிக்கும், லக்ஷ்மி தேவிக்கும் தான் முக்கியத்துவம். இந்நிலையில் அடுத்த வாரம் ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை ஒட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக 2 நாட்கள் சனி, ஞாயிறு என்பதால், வெளியூர் செல்லும் பயணிகளுக்காக சிறப்பு பேருந்து இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த சூழலில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை சற்று அதிகரித்துள்ளது. நாளை இரு மடங்கு விலை உயர வாய்ப்பு என விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆயுத பூஜையை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை சற்று அதிகரித்துள்ளது. நேற்று வரை ஒரு கிலோ மல்லிகை 750 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று கிலோ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. முல்லைப் பூ 500 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் ரூ.800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது, கனகாம்பரம் நேற்று 500-க்கு விற்பனை ஆன நிலையில் இன்று 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று சாமந்தி, சம்பங்கி, ரோஸ், அரளி, செண்டுமல்லி ஆகிய பூக்களின் விலையும் நேற்றை விட இன்று சற்று விலை அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. ஆயுதபூஜை மற்றும் முகூர்த்த நாட்களை முன்னிட்டு, இன்று முதல் பூக்களின் விலை தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும், மல்லிகைப் பூ ஒரு கிலோ நாளே இருமடங்கு உயர வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.