திருவாதிரை திருநாள் - பழனி பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆருத்ரா தரிசனம்
கோயில் ஓதுவார் திருவெம்பாவை பாடல்களை பாடினார். அதையடுத்து அம்மன், சிவபெருமானுக்கு தீபாராதனை நடந்தது
மார்கழி மாதத்தில் தில்லைச் சிதம்பரத்தில் மற்றும் ஆரூர் கோயில் கொண்டருளிய நடராஜப் பெருமானைமற்றும் தியாகராஜர் பெருமான் தரிசக்க தேவர்கள் ஒன்றுகூடுவதாக ஐதீகம் உண்டு. தேவர்களுக்கு இம்மாதம் அதிகாலை பொழுதாகும். இக்காலத்தில் (வைகறையில்) சுவாமி தரிசனம் செய்வது உத்தமமாகக் கருதப்படுகின்றது. அக்காலத்தைப் பிரம்ம முகூர்த்தம் என்றும் அழைப்பர்.
மார்கழி மாதம் திருவாதிரை நாளன்று நடராஜருக்கு சிறப்புகள் நடைபெறும். அவற்றுள் சிதம்பரத்தில் மற்றும் திருவாரூர் நடப்பது மிகவும் சிறப்புடையது. திருவாதிரை தினத்தில் தியாகராஜ சுவாமி வட பாத தரிசனம் காட்டப்படும். திருவாதிரை தினததில் தில்லை நடராஜப் பெருமான் ஆரோகணித்து தேரில் வீதி வலம் வருவர் .இதை ஆருத்ரா தரிசனம் செய்வதற்காக செல்வார்கள். இந்த நிலையில் திருவாதிரை தினமான இன்று பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆருத்ரா சாமி தரிசனம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர தினமான நேற்று பக்தர்கள் வீடுகளில் வழிபாடு செய்தனர். தொடர்ந்து பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று அதிகாலையில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத நடராஜ பெருமானுக்கு பால், பன்னீர், விபூதி, சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து சோடஷ அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து புலித்தோல் பட்டாடை அணிந்து, அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து ரதவீதி உலா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நடராஜரையும், சிவகாமி அம்பாளையும் தரிசனம் செய்தனர்.
மேலும் பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதத்தில் திருவாதிரை உற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 10 நாட்கள் கொண்டாடப்படும் இவ்விழா பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் கடந்த 11ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் 9 ஆம் நாள் இரவு பெரியநாயகி அம்மன் சன்னதியில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
சன்னதி முன்பு உள்ள மண்டபத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பொன்னூஞ்சலில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதை காண சப்பரத்தில் சிவபெருமான் எழுந்தருளினார். கோயில் ஓதுவார் திருவெம்பாவை பாடல்களை பாடினார். அதையடுத்து அம்மன், சிவபெருமானுக்கு தீபாராதனை நடந்தது.
கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்க