மேலும் அறிய

சுகாதாரத்துறை செயலர் முன்னிலையில் செய்தியாளர்களிடம் வாக்குவாதம் - துப்புரவு மேலாளர் சஸ்பண்ட்

’’பழனியில் தலைக்காய விபத்து சிகிச்சை பிரிவு தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உறுதி’’

திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்  ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்ததாவது: தமிழக அரசு சார்பில் பழனி அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடங்கள் கட்ட 9 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், இது குறித்து ஆய்வு செய்ததாகவும், ஆய்வின்முடிவில் பழனிக்கு தேவையான கட்டிடங்கள் கட்டவும், உபகரணங்கள் வாங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சுகாதாரத்துறை செயலர் முன்னிலையில் செய்தியாளர்களிடம் வாக்குவாதம் - துப்புரவு மேலாளர் சஸ்பண்ட்

தொடர்ந்து பழனி மற்றும்  கொடைக்கானல் முக்கிய  சுற்றுலா தளங்கள் இருப்பதால் அதிகளவில் விபத்து ஏற்பட்டு தலைக்காயம் சிகிச்சைக்காக வருபவர்கள் அதிக அளவில் மதுரை மற்றும் கோவைக்கு அனுப்பப்படுவதாக தெரிகிறது. எனவே பழனியிலேயே தலைக்காய சிகிச்சைக்காக நியூரோ மருத்துவர் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், சிடி ஸ்கேன் போல எம்ஆர்ஐ ஸ்கேன் மையம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.அப்போது தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வரும் பழனி அரசு மருத்துவமைனையில் ஒரேயொரு கழிவறை மட்டுமே உள்ளதாகவும், அதுவும் சுகாதாரமின்றி இருப்பதாகவும் புகார் தெரிவித்தனர்.

சுகாதாரத்துறை செயலர் முன்னிலையில் செய்தியாளர்களிடம் வாக்குவாதம் - துப்புரவு மேலாளர் சஸ்பண்ட்

அப்போது அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவுப் பணியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்தின் மேலாளர் விக்னேஷ் என்பவர் செய்தியாளர்களிடம் தகராறில் ஈடுபட்டார். தொடர்ந்து இது கேட்கக்கூடாது என்றும் தகராறில் ஈடுபட்டார். இதனால் துப்புரவு நிறுவன மேலாளருக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மேலாளர் விக்னேஷ் செய்தியாளர்களை தாக்க முற்பட்டார். இதனையடுத்து சக ஊழியர்கள் விக்னேஷை தடுத்து அழைத்துச் சென்றனர். பொதுமக்கள் மத்தியிலேயே சாகாதாரத்துறை முதன்மை செயலாளர்‌ முன்னிலையில் பத்திரிக்கையாளர்களை தாக்க முயன்ற தனியார் துப்புரவு நிறுவன மேலாளர் விக்னேஷின் செயலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சுகாதாரத்துறை செயலர் முன்னிலையில் செய்தியாளர்களிடம் வாக்குவாதம் - துப்புரவு மேலாளர் சஸ்பண்ட்

இதுகுறித்து பழனி அரசு தலைமை மருத்துவரிடம்‌ ஒப்பந்த நிறுவனத்தின் மேலாளர் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்க‌ வலியுறுத்தி பத்திரிகையாளர்கள்  புகார்‌ அளித்துள்ளனர். இந்த புகாரையடுத்து பழனி அரசு மருத்துவமனை ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணி மேற்கொள்ளும் நிறுவனத்தின் மேலாளர் விக்னேஷ் என்பவர் தனியார் செய்தி தொலைக்காட்சி நிருபர்கள் தாக்க முயன்றது தொடர்பாக செயலாளர் ராதாகிருஷ்ணன் பரிந்துரையின் பேரில் விக்னேஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற

https://bit.ly/2TMX27X

விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,

தேனியில் பெண் போல் நடித்து குறுஞ்செய்தி மூலம் 3.5 லட்சம் மோசடி - நைஜீரியாவை சேர்ந்த நபர் கைது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!

Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?

பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்

Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்

ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்
Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்
"தத்துவம் இல்லாத தலைவர்" சீமானா? விஜய்யா? அடித்துக் கொள்ளும் அண்ணன்களும், தம்பிகளும்!
Exclusive : ”இன்னொரு கதை பண்ணுங்க சார்” ரஜினி சொன்ன அந்த இயக்குநர் யார் தெரியுமா..?

ADMK Generalbody Meeting: அதிமுகவில் அடி, தடியால் சர்ச்சை - அவசரமாக பொதுக்குழுவை கூட்டும் எடப்பாடி பழனிசாமி

Fengal Cyclone LIVE: சென்னையில் நவ 29, 30ம் தேதி அதிகனமழைக்கு வாய்ப்பு - பிரதீப் ஜான்

Embed widget