மேலும் அறிய

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை என்றால் சமூக நீதிப் பற்றி திமுக பேச வேண்டாம் - அன்புமணி ராமதாஸ் காட்டம்

முதல்வர் சென்னைக்கு ரூ.4000 கோடி செலவிட்டதாக சொல்கிறார், ஆனால் அமைச்சர் ரூ.1900 கோடி தான் செலவிட்டதாக சொல்கிறார்கள். முதலில் இதற்கு அவர்கள் வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த பா.ம.க., தலைவர் அன்புமணி ராமதாஸ் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்கிற கருத்தரங்கிற்கு பங்கேற்பதற்காக மதுரை வந்துள்ளேன். உடனடியாக தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஒரு முறை முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தார். மேலும் மாநில அரசு ஜாதி மாறி கணக்கெடுப்பு நடத்த முடியாது என முதல்வர் கூறி இருக்கிறார். ஆனால் பீகாரில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது, கர்நாடகாவில் எடுத்திருக்கிறார்கள், சென்சஸ் மற்றும் சர்வே இரண்டிற்கும் உரிய வித்தியாசத்தை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை என்றால் சமூக நீதிப் பற்றி திமுக பேச வேண்டாம் - அன்புமணி ராமதாஸ் காட்டம்
 
1931 கடைசியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. உண்மையாக பின்தங்கி உள்ள மக்களை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு சலுகைகள், இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதுதான் உண்மையான சமூக நீதி. அதிகாரம் இருந்தும் எடுக்க மாட்டோம் என்று கை கழுவி விடுவது சமூக நீதிக்கு எதிரான சமூக அநீதி. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை என்றால் சமூக நீதிப் பற்றி திமுக பேச வேண்டாம். இந்தியா முழுவதும் கணக்கெடுப்பு நடைபெறுகிறது. திமுக அரசு தட்டிகழிப்பதற்கு என்ன காரணம். பின் தங்கிய சமுதாயத்தை முன்னிட்டு தான் உண்மையான சமூக நீதி. இட ஒதுக்கீடை 50 சதவீதத்திற்கும் மேல் கிடையாது என தீர்ப்பு வந்து விட்டால் அதற்கு திமுகவும், அதிமுகவும் தான் காரணம்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை என்றால் சமூக நீதிப் பற்றி திமுக பேச வேண்டாம் - அன்புமணி ராமதாஸ் காட்டம்
 
சென்னையில் புயலுக்குப் பிறகு இயல்பு நிலை திரும்பவில்லை, பலர் இன்னும் மீட்டெடுக்கப்படவில்லை, பலருக்கு பால் மற்றும் குடிநீர் கூட கிடைக்கவில்லை. அதிகாரிகள் வேலை செய்கிறார்கள் ஆனால் வேகம் பத்தவில்லை. அதற்கு காரணம் சரியான திட்டமிடுதல் இல்லை. 2015 இல் வந்த வெள்ளத்தை பார்த்த பிறகும் இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை, இனிமேலும் பாடம் கற்றுக்கொள்ள போவதில்லை, மக்களும் மறந்து விடுவார்கள். உலக வெப்பநிலை அதிகமாகும் காரணங்களால் இன்னும் மோசமான விளைவுகள் வரும், இன்னும் ஐந்து ஆண்டுகளில் சென்னைக்கு அடுத்த பெரிய வெள்ளம் வரும். இன்னும் பத்து ஆண்டுகளில் உணவு தட்டுப்பாடு வரும். ஆனால் தற்போதைய தமிழக அரசு விலை நிலங்களை கைப்பற்றி அதை நாசப்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் 65 சதவீத தொழிற்சாலைகள் சென்னைக்கு 100 கிலோ மீட்டர் சுற்றளவில் மட்டுமே உள்ளது. சென்னையில் நாலு சதவீத ஆக்கிரமிப்புகள் மட்டும் தான் ஏழை எளிய மக்களின் உள்ளது பாக்கி 96 சதவீதம் அரசு மற்றும் பெரிய தொழிலதிபர்கள் தான் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள். திராவிட ஆட்சி வந்த பிறகு தமிழகத்தில் 300 ஏரிகள் காணவில்லை. சென்னையில் உள்ள வடிகால் போல இந்தியாவில் வேறு எங்கும் இல்லை. ஆனாலும் இந்த சேதங்கள் ஏற்படுவதற்கு காரணம் திராவிட கட்சிகள் தான். புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்து நான் மட்டும்தான் பேசிக் கொண்டிருக்கிறேன் மற்ற கட்சிகள் இதைப்பற்றி பேசுவதில்லை, இளைஞர்களுக்கும் சினிமா மற்றும் ஐபிஎல் மட்டும்தான் தெரிகிறது இதைப் பற்றி யாரும் சிந்திப்பதில்லை. 

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை என்றால் சமூக நீதிப் பற்றி திமுக பேச வேண்டாம் - அன்புமணி ராமதாஸ் காட்டம்
 
வைகை ஆற்றில் ரசாயன கழிவுகள் கலக்கப்பட்டுள்ளது. சமீப காலத்தில் தென் மாவட்டங்களில் பட்டியலின மக்கள் கொடுமையாக தாக்கப்பட்டுள்ளார்கள். இது கண்டிக்கத்தக்கது. இதைத் திட்டமிட்டு நடத்தப்படும் தாக்குதலாக நான் பார்க்கிறேன். இதை அரசு கட்டுப்படுத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் மிகப்பெரிய கலவரமாக மாறும். அதேபோல கஞ்சா போதை பொருள் பயன்பாடு அதிகமாகியுள்ளது. மதுரையில் தொழில்நுட்ப பூங்கா ஆறு ஏக்கரில் அமைக்கப்பட உள்ளது. ஆனால் அது பத்தாது இடம் மாற்றி ரிங் ரோடு பகுதியில் இன்னும் பெரியதாக அமைக்க வேண்டும். கனிம வளத்தில் ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான லாரிகள் கன்னியாகுமரியில் இருந்து கேரளாவிற்கு சென்று கொண்டிருக்கிறது. இதற்கு சிபிஐ விசாரணை வேண்டும். 

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை என்றால் சமூக நீதிப் பற்றி திமுக பேச வேண்டாம் - அன்புமணி ராமதாஸ் காட்டம்
 
வெள்ளத்திற்கு ரூ.500 கோடி மழைநீர் வடிகால் திட்டங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இது ஆனால் பத்தாது முழுமையாக திட்டங்கள் கொண்டு வர வேண்டும். இருக்கக்கூடிய வடிகால்களை தூர்வாரி சுத்தப்படுத்த வேண்டும். எண்ணூரில் தூர்வாரப்படாததால் தான் ரசாயன கழிவுகள், எண்ணைகள் கலந்துள்ளது. சென்னைக்கு சென்னையை சுற்றி புதியதாக 10 ஏரிகள் உருவாக்க வேண்டும். பிரச்சனை என்னவென்றால் அடுத்த தலைமுறைகளை பற்றி இவர்களுக்கு கவலை இல்லை, அடுத்த தேர்தலை பற்றி தான் சிந்திக்கிறார்கள். முதல்வர் 4000 கோடி செலவிட்டதாக சொல்கிறார், ஆனால் அமைச்சர் 1900 கோடி தான் செலவிட்டதாக சொல்கிறார்கள். முதலில் இதற்கு அவர்கள் வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும். சென்னையில் 99 சதவீத நீர் அகற்றப்பட்டு விட்டதாக தலைமைச் செயலாளர் சொல்கிறார். ஆனால் இது பொய். பலர் இறந்ததாக செய்தித்தாள்களில் வருகிறது. ஆனால் அரசு எவ்வளவு பேர் இறந்தார்கள் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. புயலால் அடுத்து தொற்று நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று பேசினார்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை என்றால் சமூக நீதிப் பற்றி திமுக பேச வேண்டாம் - அன்புமணி ராமதாஸ் காட்டம்
 
நிதிக்காக மத்திய அரசிடம் அழுத்தம் கொடுப்பீர்களா என்ற கேள்விக்கு
 
நிச்சயமாக நாங்களும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம். வேண்டுமென்றால் நாங்களும் உடன் வந்து அழுத்தம் கொடுக்க தயாராக உள்ளோம். தொலைநோக்கு திட்டங்களுக்கான செலவுக்கு கூடுதலாக நிதி வேண்டும். ஆனால் இனி வரக்கூடிய நாட்களில் ஏற்படும் பிரச்னைகளை எதிர் கொள்ள நிச்சயம் ஒரு மாஸ்டர் பிளான் வேண்டும். பாமக சார்பாக ஒரு மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியத்தை சென்னை வெள்ளத்திற்காக நாங்கள் கொடுக்கின்றோம் என்று கூறினார்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget