மேலும் அறிய
Advertisement
Sellur Raju: 'திமுக அரசு மதுரைக்கு ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை' - முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ
மதுரை மாநகராட்சி புதிய திட்டத்திற்கு ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி
மதுரை மாநகராட்சி பகுதிகளில் செய்ய வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அதிமுக மாமன்ற உறுப்பினர்களுடன் மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜித் காலோனிடம் கோரிக்கை மனு அளித்தார்.
திமுக அரசு மதுரைக்கு ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை
— HARIKRISHNAN (@hari_rs_jo) July 8, 2022
கலைஞர் நூலகம் தவிர வெற எந்த ஒரு திட்டமும் மதுரைக்கு செயல்படுத்தவில்லை
எங்களுடைய ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை தான் மதுரையில் உள்ள @pmoorthy21 @ptrmadurai திறந்து வைக்கின்றனர்
-@SellurKRajuoffl @News18TamilNadu pic.twitter.com/LLXMxcwYjt
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறுகையில், "மதுரை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. 4 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருவதால் தொற்று நோய்கள் பரவுகிறது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரை: ஜூலை 30ல் மீனாட்சியம்மன் கோயில் ஆடி முளைக்கொட்டு உற்சவ கொடியேற்றம் - கோயில் நிர்வாகம் அறிவிப்பு
மதுரை மாநகராட்சியில் மக்கள் தொகைக்கு ஏற்ப பாதாள சாக்கடை பணிகள் நடைபெறவில்லை. மதுரை மாநகராட்சி வரி வருவாயை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் கொண்டு வந்த அம்ரூத் குடிநீர் திட்டத்தால் குடிநீர் தட்டுப்பாடு வராது. மதுரையில் ஒராண்டில் தி.மு.க., எந்தவொரு திட்டமும் செய்யவில்லை. மதுரையில் புதிய திட்டத்திற்கு ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை, கலைஞர் நூலகம் தவிர எந்தவொரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அதிமுக காலத்தில் கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க., தற்போது திறந்து வைத்து வருகிறார்கள். அ.தி.மு.க., உறுப்பினர்கள் வெற்றி பெற்ற வார்டுகளில் தூய்மை பணிகள் நடைபெறவில்லை, மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து விரைவில் அ.தி.மு.க., சார்பில் போராட்டம் நடத்தப்படும் " என கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion