மேலும் அறிய
Advertisement
மதுரை - செங்கோட்டை, நெல்லை - செங்கோட்டை பகுதிக்கு ஜூலை 1 முதல் கூடுதல் ரயில்கள் !
மதுரை - செங்கோட்டை, திருநெல்வேலி - செங்கோட்டை மற்றும் திருநெல்வேலி - திருச்செந்தூர் பிரிவுகளில் ஜூலை 1 முதல் கூடுதல் முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில்களை இயக்க ஏற்பாடு செய்துள்ளது.
மதுரை - செங்கோட்டை - மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில்:
மதுரை - செங்கோட்டை முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில் (06663) மதுரையிலிருந்து காலை 11.30 மணிக்கு புறப்பட்டு மாலை 03.20 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும். மறுமார்க்கத்தில் செங்கோட்டை - மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06664) காலை 11.50 மணிக்கு புறப்பட்டு மாலை 03.35 மணிக்கு மதுரை வந்து சேரும். இந்த ரயில்கள் திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்பகோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
#மதுரை - செங்கோட்டை, திருநெல்வேலி - செங்கோட்டை மற்றும் திருநெல்வேலி - திருச்செந்தூர் பிரிவுகளில் ஜூலை 1 முதல் கூடுதல் முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில்களை இயக்க ஏற்பாடு செய்துள்ளது.
— Arunchinna (@iamarunchinna) June 25, 2022
Further reports to follow - @abpnadu@drmmadurai | #madurai | @TrainUsers | @SRajaJourno
2. திருநெல்வேலி - செங்கோட்டை - திருநெல்வேலி பகுதிக்கு இரண்டு ஜோடி சிறப்பு விரைவு ரயில்கள்
திருநெல்வேலி செங்கோட்டை முன்பதிவில்லா சிறப்பு ரயில் (06681) திருநெல்வேலியிலிருந்து காலை 09.10 மணிக்கு புறப்பட்டு காலை 11.25 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும். இதே மார்க்கத்தில் மற்றொரு திருநெல்வேலி செங்கோட்டை முன்பதிவில்லா சிறப்பு ரயில் (06687) திருநெல்வேலியிலிருந்து மதியம் 01.50 மணிக்கு புறப்பட்டு மாலை 04.15 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும். மறுமார்க்கத்தில் செங்கோட்டை - திருநெல்வேலி முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06658) செங்கோட்டையிலிருந்து மதியம் 02.55 மணிக்கு புறப்பட்டு மாலை 05.20 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். இதே மார்க்கத்தில் மற்றொரு செங்கோட்டை - திருநெல்வேலி முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06684) செங்கோட்டையிலிருந்து காலை 10.05 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.25 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். இந்த ரயில்கள் திருநெல்வேலி டவுன், பேட்டை, சேரன்மகாதேவி, காரைக்குறிச்சி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழாம்பூர், ஆழ்வார்குறிச்சி, ரவண சமுத்திரம், கீழக்கடையம், மேட்டூர், பாவூர்சத்திரம், கீழப்புலியூர், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
3. திருச்செந்தூர் - திருநெல்வேலி - திருச்செந்தூர் முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில்:
திருச்செந்தூர் - திருநெல்வேலி முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06405) திருச்செந்தூரிலிருந்து காலை 10.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.00 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். மறுமார்க்கத்தில் திருநெல்வேலி - திருச்செந்தூர் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06409) திருநெல்வேலியில் இருந்து மாலை 04.05 மணிக்கு புறப்பட்டு மாலை 05.45 மணிக்கு திருச்செந்தூர் சென்று சேரும். இந்த ரயில்கள் காயல்பட்டினம், ஆறுமுகநேரி, குரும்பூர், கச்சினாவிளை, நாசரேத், ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவைகுண்டம், தாதன்குளம், செய்துங்கநல்லூர், பாளையங்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai: ‘அம்பர்கிரிஸ்’ எனும் திமிங்கல எச்சம்; பதுக்கிவைத்திருந்த 3 பேர் கைது - ஒரு கிலோ எச்சம் பல கோடியாம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion