மேலும் அறிய
Advertisement
Sarathkumar: தேர்தலில் மனைவி வெற்றிக்காக அங்கப்பிரதட்சணம் செய்த நடிகர் சரத்குமார்
நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் நடிகர் சரத்குமார் விருதுநகர் ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்து பிரார்த்தனை செய்தார்.
விருதுநகர் மாரியம்மன் கோயிலில் நடிகர் சரத்குமார் அங்கப்பிரதட்சணம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நடைபெற்ற மக்களவை தேர்தலானது கடந்த 1-ம் தேதியோடு முடிவுக்கு வந்தது. கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கிய மக்களவைத் தேர்தலின் கடைசி வாக்குப்பதிவு 43 நாட்களுக்குப் பிறகு, ஜூன் 1 - அன்று முடிவடைந்தது. தேர்தல் முடிந்த அடுத்த நொடியே, இந்தியா முழுவதும் உள்ள மக்கள் தேர்தல் பிந்தைய கருத்துக் கணிப்பில் என்ன முடிவுகள் வெளியாகும் என ஆவலுடன் எதிர்பார்த்தனர். இருப்பினும், தேர்தல் முடிவுகள் நாளை, ஜூன் 4-ம் தேதி வெளியாக இருக்கிறது. தேர்தல் முடிவுகளுக்கு முன்பாக, இந்த தேர்தல் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பல வேட்பாளர்களுக்கு மகிழ்ச்சியையும், சோகத்தையும் கொடுக்கலாம். ஆனால் தங்கள் ஆதரவு நிலைப்பாடு உள்ள கட்சிச் தொண்டர்கள் தற்போதே இனிப்புகளை தயார் செய்து வருகின்றனர். இந்நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் மனைவி ராதிகாவின் வெற்றிக்காக நடிகர் சரத்குமார் விருதுநகர் ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோயிலிலில் அங்கப்பிரதட்சணம் செய்து பிரார்த்தனை செய்தார்.
நடிகர் சரத்குமார் அங்கப்பிரதட்சணம்
நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தற்போதைய எம்.பி மாணிக்கம் தாகூர் மீண்டும் போட்டியிட்டார். தே.மு.தி.க., சார்பில் நடிகர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் போட்டியிட்டார். பா.ஜ.க., சார்பில் நடிகை ராதிகா போட்டியிட்டுள்ளார். நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் நடிகர் சரத்குமார் விருதுநகர் ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோயிலில் நேற்றிரவு அங்க பிரதட்சணம் செய்து பிரார்த்தனை செய்தார். ராதிகா சரத்குமார் உடன் இருந்தார். ராதிகாவின் வெற்றிக்காக நடிகர் சரத்குமார் இந்த பிரார்த்தனை செய்ததாக கூறப்படுகிறது.
ராதிகா வெற்றி பெற வேண்டி சரத்குமார் அங்கபிரதட்சணம்!https://t.co/wupaoCzH82 | #Radhika #Radhikasarathkumar #Tamilnadu #loksabhaelections2024 #Election2024 pic.twitter.com/mqCt1pCJQs
— ABP Nadu (@abpnadu) June 3, 2024
விருதுநகரில் யாருக்கு வெற்றி
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி, ஸ்டார் தொகுதியாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே எம்.பி.,யாக உள்ள மாணிக்கம் தாகூர் மீண்டும் வெற்றிபெறுவார் என சொல்லப்படும் நிலையில், விஜயபிரபாகரன் டஃப் கொடுப்பார் எனவும் சொல்லப்படுகிறது. இதே தொகுதியில் சினிமா பிரபலம் ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டதால் இந்த தொகுதியின் வெற்றி பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - உதவித்தொகை, ஊக்கத்தொகை பெற இது கட்டாயம்: பள்ளி திறக்கும்போதே தொடங்கும் சிறப்புத் திட்டம்! அரசு அதிரடி
மேலும் செய்திகள் படிக்க மிஸ் பண்ணாதீங்க - Latest Gold Silver Rate: வார இறுதியில் சட்டென குறைந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.160 குறைந்து விற்பனை..
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion