Aadi Perukku 2024: ஆடிப்பெருக்கு! உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றில் திருவிளக்கு விட்டு பெண்கள் சிறப்பு வழிபாடு!
ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு கங்கா தேவி வணங்கி உத்தம பாளையத்தில் முல்லைப் பெரியாற்றில் திருவிளக்கு விட்டு ஏராளமான பெண்கள் சிறப்பு வழிபாடு.
தேனி மாவட்டம் விவசாயம் சார்ந்த மாவட்டம் ஆகும் இங்கு முல்லைப் பெரியாறு அணையின் நீரினை கொண்டு விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்குள்ள விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரம் உயரவும் விவசாயம் செழிக்கவும் ஆண்டுதோறும் ஆடி 18 ஆம் பெருக்கு நாளில் முல்லைப் பெரியாற்றின் கரையில் அமைந்துள்ள உத்தமபாளையம் அருள்மிகு ஸ்ரீஞானாம்பிகை உடனுறை திருக்காளாத்தீஸ்வரர் கோவிலில் ஏராளமான பெண்கள் சிறப்பு வழிபாடுகள் செய்தனர். அதனைத் தொடர்ந்து கங்காதேவி வழிபடு செய்து விவசாயம் மற்றும் குடும்பம் செழித்திட ஆற்றங்கரையில் தீபம் ஏற்றி மஞ்சள் அருகம்புல் பழங்கள் படையலாக இட்டு சிறப்பு வழிபாடு செய்து ஆற்றி திருவிளக்கு விடப்பட்டது.
ஏராளமான பெண்கள் ஆற்றங்கரையில் அமர்ந்து திருமாங்கல்யம் மாற்றியும் மாங்கல்ய நாணல்கள் தானம் செய்து வழிபாடு செய்தனர்.பிரசாதமாககாமதேவ் அறக்கட்டளை சார்பாக அனைவருக்கும் பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது மேலும் பூஜையில் கலந்து கொண்ட ஏராளமான பெண்கள் அரிசி மாவு தேங்காய் வெள்ளம் கலந்த அரிசி உள்ளிட்டவைகளை அனைவருக்கும் அருள் பிரசாதமாக வழங்கி சிறப்பு வழிபாடு செய்தனர்.
இது குறித்து பக்தர் ஒருவர் கூறுகையில் , ஆடிப்பெருக்கு என்பது பெண்களுக்கு உகந்த திரு நாள் என்றும், அதே வேலையில் நீர் நிலைகளை வணங்குவதும் இதே நாள் விவசாய செழிப்புக்காக வழிபாடு செய்வதும் வழக்கமாகி வருவதாக கூறினார். குறிப்பாக இன்று பெண்கள் தாலிக்கயிறுகளை மாற்றி அம்மனுக்கு நெய் விளக்கு ஏந்தி வழிபாடு செய்து முல்லை பெரியாற்றில் ஓடும் தண்ணீரில் விட்டு வழிபாடு செய்வதும் வழக்கமாக உள்ளது என்றும் கூறினார். இக்கோவில் ராகு கேது கால சர்ப்ப தோஷ நிவர்த்தி ஸ்தலமாக விளங்வதால் இக்கோவிலுக்கென தனி சிறப்பு உண்டு என்றும், திருமண வரன் வேண்டுபவர்களுக்கு உகந்த கோவில் எனவும் கூறினார்.
இதே போல் பெரியகுளத்தில் குலதெய்வ வழிபாடு மிகவும் மகிழ்ச்சியாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர் அருவாளில் ஏறி நின்று பொதுமக்களுக்கு அருள்வாக்கு கூறினார்.
பெரியகுளம் பகுதியில் உள்ள மதுரவீரன் சாமி முத்தையா சாமி பெத்தண்ணசாமி கருப்பசாமி உள்ளிட்ட சுவாமிகளை குலதெய்வமாக நினைத்து பெரியவர் மற்றும் அதை சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குலதெய்வ வழிபாடு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து அருள்மிகு பாலசுப்பிரமணியம் திருக்கோவில் வராக நதிக்கரையில் சுவாமி பெட்டிகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அங்கிருந்து பெரியகுளம் முக்கிய வீதிகள் வழியாக சுவாமி பெட்டி ஊர்வலமாக கொண்டுவரப்பட்டனர். இதில் பக்தர் அருவாளில் ஏறி நின்று அங்கிருந்த பொது மக்களுக்கு அருள்வாக்கு கூறினார். பின்னர் சாமி பெட்டியை கோவிலுக்கு கொண்டு வந்து சாமிக்கு சிறப்பு தீபாரணைகள் நடைபெற்றது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.