US Plane Crash: அச்சச்சோ..! நடுவானில் ஹெலிகாப்டருடன் மோதிய விமானம் - கீழே விழுந்து நொறுங்கும் வீடியோ, 64 உயிர்கள்?
US Plane Crash: அமெரிக்காவில் நடுவானில் ஹெலிகாப்டர் உடன் மோதிய விமானம் கீழே விழுந்து நொறுங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
![US Plane Crash: அச்சச்சோ..! நடுவானில் ஹெலிகாப்டருடன் மோதிய விமானம் - கீழே விழுந்து நொறுங்கும் வீடியோ, 64 உயிர்கள்? plane crashes into potomac river in us after mid air collision with chopper near reagan airport video US Plane Crash: அச்சச்சோ..! நடுவானில் ஹெலிகாப்டருடன் மோதிய விமானம் - கீழே விழுந்து நொறுங்கும் வீடியோ, 64 உயிர்கள்?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/30/19589dfa4620e08ba2672dc4a6d3b8871738206817413614_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
US Plane Crash: அமெரிக்காவில் நடுவானில் ஹெலிகாப்டர் உடன் மோதி கீழே விழுந்து நொறுங்கிய விமானத்தை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
நாடுவானில் மோதிக்கொண்ட விமானம் - ஹெலிகாப்டர்:
அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் உள்ள பொட்டோமேக் ஆற்றில் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வணிக ஜெட் விமானத்தில் பயணித்தவர்களின் எண்ணிக்கை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ரொனால்ட் ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்தை நெருங்கும் போது, ஹெலிகாப்டருடன் நடுவானில் மோதியதில் விமானம் விபத்துக்குள்ளானது.
BREAKING: Mid-air collision between a helicopter and commercial jet on approach to Ronald Reagan Washington National Airport. Rescue boats are scanning the Potomac River. pic.twitter.com/ySwHFq9Ej1
— Breaking 4 News (@Breaking_4_News) January 30, 2025
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் 5342 DC விமான நிலையத்திற்கு அருகில் பிளாக் ஹாக் ஹெலிகாப்டருடன் மோதியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்தின் வீடியோவில் இரண்டு விமானங்களும் தீப்பற்றி எரியும் நிலையில் காட்சியளிக்கின்றன.
64 பேரின் நிலைமை என்ன?
விபத்து நடந்த விமானத்தில் 60 பயணிகள் மற்றும் 4 பயணிகள் என, மொத்தம் 64 பேர் இருந்துள்ளனர். அதில் பலர் இறந்து இருக்கலாம் என அதிகாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். மறுமுனையில் விமானத்தின் மீது மோதிய ராணுவ ஹெலிகாப்டரில் 3 பேர் இருந்துள்ளனர்.
விபத்துக்குள்ளான பயணிகள் விமானம் கன்சாஸில் இருந்து வாஷிங்டன் டிசி விமான நிலையத்திற்கு வந்துகொண்டிருந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
🚨 #BREAKING: A plane has crashed into a helicopter while landing at Reagan National Airport near Washington, DC
— Nick Sortor (@nicksortor) January 30, 2025
Fatalities have been reported, a MASSIVE search & rescue operation is happening in the Potomac River
Witnesses reported seeing a “massive crash” and hearing a loud… pic.twitter.com/GtSiWjUWn0
மீட்பு பணிகள் தீவிரம்:
புதன்கிழமை மாலை இந்த சம்பவம் நிகழ்ந்ததாக வாஷிங்டன் DC தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது. மீட்புப் படகுகள் பொடோமாக் ஆற்றில் ஆய்வு செய்து வருகின்றன. விபத்தின் விளைவாக, ரொனால்ட் ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்தின் அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)