மேலும் அறிய
Advertisement
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு; மதுரையில் உதவி ஆய்வாளர் மீது வழக்கு பதிவு
சிறப்பு பிரிவு காவலராக பணிபுரிந்த உதவி ஆய்வாளர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மதுரை மாநகர் திருநகர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்த தென்னரசு தற்போது மதுரை மாநகர காவல் துறை சட்ட ஒழுங்கு துணை ஆணையர் சிறப்பு பிரிவு காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.
- Chandrayaan 3 Landing LIVE: நிலவில் தரையிறங்கும் சந்திரயான் - 3 விண்கலம்.. உடனடி அப்டேட்ஸ் இங்கே...
இந்த நிலையில் உதவி ஆய்வாளர் தென்னரசு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக வந்த புகாரையடுத்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில், உதவி ஆய்வாளர் தென்னரசு கடந்த 2016 முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலும் வருமானத்திற்கு அதிகமாக பல்வேறு இடங்களில் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இந்த சொத்துக்களை அவரது பெயரிலும் அவரது மனைவி பெயரிலும் பதிவு செய்திருப்பதாக தெரியவந்ததையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2000ஆம் ஆண்டில் பணிக்கு சேர்ந்த தென்னரசு வருமானத்திற்கு அதிகமாக இரண்டு கோடி ரூபாய்க்கு அதிகமான மதிப்பிலான சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறையினர் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். மதுரை மாவட்ட மேலூர் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் நிலங்களை வாங்கி பதிவு செய்திருப்பது லஞ்ச ஒழிப்பு துறையின் முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகர் குற்றப்பிரிவு துணை ஆணையர் சிறப்பு பிரிவு காவலராக பணிபுரிந்த உதவி ஆய்வாளர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - கோலாகலமாக நடைபெற்ற பாண்டூர் ஆதி வைத்தியநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் விழா..!
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Chandrayaan 3 Modi: இந்தியாவின் பெருமைமிகு தருணம்.. சந்திரயான்-3 தரையிறங்கும் நிகழ்வில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி..
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion