மேலும் அறிய

கரூர் கற்பக ஆலய விநாயகருக்கு 48-ம் நாள் முன்னிட்டு சங்காபிஷேக விழா

கரூர் அண்ணா சாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

கரூரில் மண்டல அபிஷேக 48-ம் நாள் முன்னிட்டு கற்பக விநாயகர் ஆலயத்தில் உள்ள மூல விநாயகருக்கு 108 சங்காபிஷேக விழா மற்றும் தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டது.

கரூர் கற்பக ஆலய விநாயகருக்கு 48-ம் நாள் முன்னிட்டு சங்காபிஷேக விழா

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா சாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் கும்பாபிஷேக விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது. 48 ஆம் நாள் மண்டல அபிஷேக நிறைவு நாளை முன்னிட்டு ஆலய மண்டபத்தில் பிரத்தியேக யாகசாலை அமைக்கப்பட்டு யாக வேள்வி நடைபெற்றது. அதை தொடர்ந்து 1008 சங்குகளால் பல்வேறு நதியில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர்களை ஊற்றி வைத்து சிவாச்சாரியார் பல்வேறு வேத மந்திரங்கள் யாக வேலியை சிறப்பாக நடத்தினார். 108 சங்குகளுக்கும் தீர்த்த கலசத்திற்கும் உதிரிப்பூக்களால் சிறப்பு அர்ச்சனை நடைபெற்று அதன் தொடர்ச்சியாக மகா தீபாராதனை காட்டினார்.

கரூர் கற்பக ஆலய விநாயகருக்கு 48-ம் நாள் முன்னிட்டு சங்காபிஷேக விழா

மூலவர் கணபதிக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர் பஞ்சாமிர்தம் ,தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு , திருமஞ்சள், மஞ்சள் , சந்தனம்,  குங்குமம் , அபிஷேக பொடி , கரும்புச்சாறு, விபூதி ,பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து மூலவர் கணபதிக்கு பட்டாடை உடுத்தி, பல்வேறு வகையான வண்ண மாலைகள் அணிவித்து தங்க கவச சிறப்பு அலங்காரத்தில் மூலவர் கணபதி காட்சியளித்தார். அதன் தொடர்ச்சியாக ஆலயத்தில் உள்ள பரிவார தெய்வங்களான குரு பகவான், ஆஞ்சநேயர், ஐயப்பன், கன்னிமூல விநாயகர், பாலமுருகன், துர்க்கை அம்மன், விஷ்ணு மற்றும் நவகிரகங்கள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

கரூர் கற்பக ஆலய விநாயகருக்கு 48-ம் நாள் முன்னிட்டு சங்காபிஷேக விழா

மூலவர் உள்ளிட்ட பரிவார சுவாமிகளுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு தங்க கவசம் சாற்றப்பட்டது . தொடர்ச்சியாக மூலவர் கணபதிக்கு உதிரிப்பூக்களால் ஆலயத்தின் சிவாச்சாரியார் கூறினார். பின்னர் சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற கும்பாபிஷேக விழா மண்டல அபிஷேக நிறைவு நாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை கற்பக விநாயகர் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர். தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!

'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி

Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்

TN Assembly: 'அகல்விளக்கு', 'திசைதோறும் திராவிடம்'- பள்ளிக் கல்வித்துறைக்கு 25 புது அறிவிப்புகள்!- என்னென்ன?

Jayam Ravi: கோலிவுட்டில் அடுத்த விவாகரத்து? கணவர் ஜெயம் ரவி புகைப்படங்களை நீக்கிய மனைவி ஆர்த்தி!

TN RAIN: மக்களே! 7 மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - வெளுக்கப் போகும் கனமழை!

Embed widget