மேலும் அறிய

 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்

கேப்டன் முதலாமாண்டு நினைவு நாளில் அஞ்சலி செலுத்திய அனைத்து தரப்பு கட்சியினர், தொண்டர்கள், மக்கள், ஊடகங்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்ள கடமை பட்டிருக்கிறேன்.

அன்னதானம் செய்வதில்தான் கேப்டன் விஜயகாந்தின் ஆன்மா சந்தோஷமடையும் என தேமுதிக பொதுச்செயலாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா தெரிவித்துள்ளார். 

விஜயகாந்த் குருபூஜை விழா முடிவுக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “விஜயகாந்த் குருபூஜை நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம். கேப்டன் முதலாமாண்டு நினைவு நாளில் அஞ்சலி செலுத்திய அனைத்து தரப்பு கட்சியினர், தொண்டர்கள், மக்கள், ஊடகங்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்ள கடமை பட்டிருக்கிறேன். காவல்துறை மிகச்சிறப்பாக அவர்களின் பணியை செய்திருக்கிறார்கள். அவருகளுக்கு என் நன்றி. காவல்துறை என்றாலே அதற்கு அடையாளமாக விளங்கியது கேப்டன் என்பது அனைவருக்கும் தெரியும். காலையில் 6 மணியில் இருந்து மாலை 6 மணி வரை மவுன அஞ்சலி செலுத்தியிருக்கிறேன். அதற்கு காரணம் கேப்டன் நம்மை விட்டு பிரிந்தது சரியாக 6.10 மணிக்கு. அதனால் இந்த 12 மணிநேரம் தலைவருக்கு மவுன அஞ்சலி செலுத்தி அவரின் ஆத்மா சாந்தி அடைந்து மக்களுக்காக வாழ்ந்தார். மக்களுக்காகவே வாழ்ந்து கொண்டு இருக்கிறார். மக்களுக்காகவே வாழ்வார். மனிதராய் பிறந்து புனிதராய் வாழ்ந்து இன்று தெய்வமாக ஒட்டுமொத்த மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட புனித ஆத்மாவாக கேப்டன் இருக்காங்க. 

நிச்சயம் நம்முடன் இருந்து நம்மை வழிநடத்துவார் என்ற நம்பிக்கையில் தான் நாங்கள் எங்கள் நாளை தொடங்குகிறோம். வரும் காலம் கேப்டன் ஆசிர்வாதத்தால் தமிழகத்துக்கு நல்லதே நடக்கும். 

முறையாக காவல்துறையை அணுகி அமைதி பேரணிக்கு பல முறை அனுமதி கேட்டோம். அனுமதி மறுக்கப்பட்டது. ஆனாலும் அமைதியான முறையில் பேரணியை நடத்தி முடித்துள்ளோம். சட்டம் ஒழுங்கு தவறி நாங்கள் நடக்கமாட்டோம். அப்படித்தான் கேப்டன் எங்களை வழிநடத்தி உள்ளார். சட்டம் ஒழுங்குக்கு எந்த ஒரு சீர் முறைகேடும் இல்லாமல் பேரணியை நடத்தியுள்ளோம். அதற்காக காவல்துறைக்கும் தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். 

என்றைக்கும் கேப்டனுக்கு விசுவாசமாக இருப்போம் எனவும் கேப்டனின் கனவும் கொள்கையும் நினைவாக உறுதிமொழி ஏற்றுள்ளோம். கேப்டனின் மறைவின் போது கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, ஜாதி, மத பேதமில்லாமல் அனைத்து தரப்பு மக்களும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 முறை வந்தார். உதயநிதி வந்தார். அவர்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறோம். அரசு மரியாதையுடன் இறுதி மரியாதையை செய்தோம். எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரும் ஏற்றுகொண்டதால் அனைவருக்கும் அழைப்பு விடுத்தோம். 

பேரணிக்கு அவர்களே அனுமதி கொடுத்திருக்கலாம். அப்படி கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். வேறு வழியில்லாமல் நாங்களே பேரணி நடத்தினோம். திமுக, அதிமுக தலைவர்களுக்கு அமைதி பேரணி செல்ல அரசு அனுமதி கொடுக்கிறது. ஆனால் இந்த அமைதி பேரணிக்கு ஏன் அனுமதி கொடுக்கவில்லை என தெரியவில்லை. அரசாங்கமே அனுமதி கொடுத்திருந்தால் இந்த அரசாங்கத்தை மக்கள் இன்னமுமே  கொண்டாடியிருப்பார்கள். கூட்டணியில் இல்லை என்பதால் அனுமதி மறுக்கப்பட்டதா? இல்லை மக்கள் கூட்டம் அதிகரித்துவிடும் என்பதால் தரவில்லையா என்று தெரியவில்லை. இனி வரும் காலமும் அன்னதானம் தொடரும். இந்த பிரபஞ்சம் இருக்கும்வரை அன்னதானம் தொடரும். அதில்தான் கேப்டனின் ஆன்மா இருக்கிறது” எனத் தெரிவித்தார். 

தலைப்பு செய்திகள்

"நானும் தலைவர் தான்!" - விசிக மாநாட்டு கூரையின் உச்சிக்கு சென்று போன் பேசியபடி தொண்டர்களுக்கு கை காட்டிய நபர்!
விசிக மாநாட்டு மேடையில் திருமாவளவனுக்கு மூச்சுத்திணறல்.. உரையை பாதியிலேயே முடித்தார் திருமாவளவன்!
விசிக மாநாட்டு மேடையில் திருமாவளவனுக்கு மூச்சுத்திணறல்.. உரையை பாதியிலேயே முடித்தார் திருமாவளவன்!
மேடை உடைப்பு... தகர ஷீட் கிழிப்பு... உளுந்தூர்பேட்டை விசிக மாநாட்டில் நிலைகுலைந்த பாதுகாப்பு!
மேடை உடைப்பு... தகர ஷீட் கிழிப்பு... உளுந்தூர்பேட்டை விசிக மாநாட்டில் நிலைகுலைந்த பாதுகாப்பு!
அரசு வேலை என கூறி 3.80 லட்சம் பணம்பெற்று போலியான நேர்காணல்.. பெண் அதிகாரியின் கணவர் செய்த தில்லு முல்லு !
அரசு வேலை என கூறி 3.80 லட்சம் பணம்பெற்று போலியான நேர்காணல்.. பெண் அதிகாரியின் கணவர் செய்த தில்லு முல்லு !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget