TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
TNPSC Free coaching: ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணக்கர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு பயிற்சியினை வழங்க உள்ளது.
![TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி? TNPSC Free coaching for Group 2, 2A exam: tahdco How to participate? TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/10/a7ac95d606e617d6b18e2ad0e108f4b41720605126021211_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு தாட்கோ சார்பில் விடுதி வசதியுடன் கூடிய இலவசப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில் கலந்துகொள்வது எப்படி என்று காணலாம்.
இதுகுறித்து தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
''தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு தாட்கோ மூலம் பயிற்சி வழங்கப்பட உள்ளது என தாட்கோ மேலாண்மை இயக்குநர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணக்கர்களுக்கு பயிற்சி
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) முன்னெடுப்பாக முன்னணி பயிற்சி நிறுவனம் மூலம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணக்கர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு பயிற்சியினை வழங்க உள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதல் நிலைத் தேர்வில் (Prelim Exam) தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்விற்கு (Mains) தேர்ச்சி பெற விரும்பும் மாணாக்கர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
யாரெல்லாம் பயிற்சி பெறலாம்?
இப்பயிற்சியினை பெற பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் 21 முதல் 32 வயது நிரம்பியவர்களும் விண்ணப்பிக்கலாம். அதே நேரத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவீனத் தொகை தாட்கோவால் மேற்கொள்ளப்படும்.
இத்திட்டத்தில் சேர www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம் என தாட்கோ மேலாண்மை இயக்குநர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
கூடுதல் தகவல்களுக்கு: https://www.tahdco.com/
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)