மேலும் அறிய
Advertisement
சீனா, இந்தோனேஷியாவில் இருந்து 90,000 டன் யூரியா இறக்குமதி - 30,000 டன் யூரியா தமிழகத்திற்கு கிடைக்கும்
இதுவரை 1,500 மெட்ரிக் டன் யூரியா மற்ற மாவட்டங்களுக்கு வைக்கப்பட்டுள்ளது. இங்கு இறக்குமதி செய்யப்படும் யூரியாவை மாநிலம் முழுவதும் அனுப்பி வைக்கப்பட ஏற்பாடு
நாகை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் காரைக்கால் தனியார் துறைமுகத்தில் கப்பல் மூலம் இறக்குமதி செய்யப்படும் யூரியாவை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர தமிழக முதலமைச்சர் எடுத்த சீரிய முயற்சியால் அனைத்து மாவட்ட விவசாய பெருமக்களின் பயன்பாட்டிற்காக 2 கப்பல்கள் மூலம் 90 ஆயிரம் டன் யூரியா இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அவற்றில் முதல் கட்டமாக 30 ஆயிரம் டன் யூரியா நம் தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இதுவரை 1,500 மெட்ரிக் டன் யூரியா மற்ற மாவட்டங்களுக்கு வைக்கப்பட்டுள்ளது. இங்கு இறக்குமதி செய்யப்படும் யூரியாவை மாநிலம் முழுவதும் அனுப்பி வைக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
அனுப்பி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இயக்குநர் அவர்களின் உத்தரவின்படி அனுப்பப்படும் யூரியாவை தினசரி ஆய்வு மேற்கொண்டு துரிதபடுத்தவும். அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரம் விற்பனை நிலையங்களுக்கு இரயில்கள் மூலமாகவும், சாலை மார்க்கமாகவும் 10 தினங்களுக்குள் விவசாயிகள் பயன்பெறும் வகையில் இறக்குமதி செய்யப்படும் மொத்த யூரியாவையும் அனைத்து மாவட்டங்களுக்கும் துரிதமாக அனுப்பப்படும் என மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தெரிவித்தார். இந்த ஆய்வில் சென்னை வேளாண்மை துறை துணை இயக்குநர் (உரங்கள்) ஷோபா, வேளாண்மை உதவி இயக்குநர் தரக்கட்டுப்பாடு. குமரன், வேளாண்மை அலுவலர் தரக்கட்டுபாடு அரவிந்தன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
தமிழகத்திற்கு யூரியா இறக்குமதி செய்யப்பட்ட தகவல் அறிந்த விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் பெய்த கனமழை காரணமாக பெருமளவிற்கு சம்பா தாளடி பயிர்கள் வெள்ளநீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டவரின் நிலையை இந்த யூரியா என்பது முழுமையாக தண்ணீர் வடிந்த பின்பு விவசாயிகள் பயன்படுத்த முடியும் எனவும் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ள பூ பிடிக்கும் பருவத்தில் உள்ள பயிர்களுக்கு தற்போது டிஏபி உரம் அவசியம் கொடுத்தாக வேண்டும் ஆனால் மாவட்டத்தில் டிஏபி உரம் என்பது தட்டுப்பாடு அதிகமாக உள்ளதால் தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தட்டுப்பாடு உள்ள அனைத்து மாவட்டத்திற்கும் டிஏபி உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது விவசாயிகள் காலத்தோடு யூரியா இறக்குமதி செய்த தமிழக அரசுக்கும் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion