மேலும் அறிய
Advertisement
திருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் வசூல் ரூ.37 லட்சம்
திருப்பரங்குன்றம் கோவில் உண்டியலில் இருந்து 37,50845 ரூபாய் ரொக்கமும்,185 கிராம் தங்கமும்,1கிலோ 360 கிராம் வெள்ளியும் கிடைக்கப் பெற்றது.
ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பரமணிய சுவாமி கோயிலில் நேற்று முன்தினம் உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் ரூபாய் 37 லட்சத்து 50 ஆயிரத்து 845 ரூபாய் ரொக்கமாகவும், தங்கம் 185 கிராம், வெள்ளி 1 கிலோ 360 கிராம் உண்டியல் மூலம் கிடைக்கப் பெற்றது. திருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் மாதம் ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். இந்த நிலையில் ஐப்பசி மாதத்திற்கான உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. அதில் பணம் ரூ.37 லட்சத்து, 50 ஆயிரத்து 845 ரூபாய், தங்கம் 185 கிராம், வெள்ளி 1 கிலோ 360 கிராம் இருந்தது.
#மதுரை திருப்பரங்குன்றம் கோவில் உண்டியலில் இருந்து 37,50845 ரூபாய் ரொக்கமும்,185 கிராம் தங்கமும்,1கிலோ 360 கிராம் வெள்ளியும் கிடைக்கப் பெற்றது. என கோயில் நிர்வாகம் தகவல்.
— arunchinna (@arunreporter92) November 16, 2022
Further reports to follow @abpnadu#madurai | #temple #thiruparamkunram | #kovil #MONEY @LPRABHAKARANPR3 pic.twitter.com/r5XOQUUhBS
இதில் திருப்பரங்குன்றம் கோயில் துணை ஆணையர் சுமேஷ் முன்னிலையில் ஸ்கந்தகுரு பாடசாலை மாணவர்கள், ஐய்யப்ப சேவா சங்கத்தினர் மற்றும் கோயில் பணியாளர்கள் இந்த உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் மதுரை மாவட்ட கிரைம் செய்திகள்
மதுரை ஒத்த ஆலங்குளம் பகுதியில் வீட்டுக்குள் புகுந்து 44 பவன் நகை கொள்ளை.
மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா ஒத்த ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த பாண்டி கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவியும் 100 நாள் வேலை திட்டத்திற்கு சென்றிருந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் ஜன்னலில் இருந்த சாவியை எடுத்து திறந்து வீட்டுக்குள் பீரோவில் இருந்த 44 பவன் தங்கச் சங்கிலி மற்றும் பத்தாயிரம் ரொக்கம் இரண்டு கொலுசுகளை திருடி சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த பெருங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் எக்கோ பார்க் அருகே பட்டாக்கத்தியுடன் வாலிபர் கைது
மதுரை திருப்பரங்குன்றம் எக்கோ பார்க் அருகே பட்டாக்கட்டியுடன் வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருப்பரங்குன்றம் இன்ஸ்பெக்டர் லிங்கபாண்டியன். இவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். இவர் திருப்பரங்குன்றம் எக்கோபார்க் அருகே சென்றபோது சந்தேகப்படும்படியாக பதுங்கி இருந்த இரண்டு வாலிபர்களை பிடிக்க முன்றார்.ஒருவர் பிடிபட்டார். அவரிடம் சோதனை செய்தபோது அவர் பட்டாகத்தி ஒன்றை மறைத்து வைத்திருந்தார். அவற்றை பறிமுதல் செய்து மேலும் விசாரணை நடத்தினார் .விசாரணையில் திருப்பரங்குன்றம் அடுத்த கீழ தெருவை சேர்ந்த அழகர் மகன் பூமிநாதன் 28 என்றும் தப்பிஓடியவர்அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி மணிகண்டன் என்ற பல்லாக்கு மணிகண்டன் என்றும் தெரிய வந்தது. பிடிபட்ட பூமிநாதனை கைதுசெய்தார். அவர்கள் குற்றம் சம்பவத்தில் ஈடுபடுவதற்காக பதுங்கி இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.தப்பிஓடிய ரவுடி மணிகண்டனை தேடிவருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
வணிகம்
தமிழ்நாடு
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion