மேலும் அறிய
Advertisement
நாய் கடித்து 33 ஆடுகள் உயிரிழப்பு; கானை நோயால் 20க்கும் மேற்பட்ட மாடுகள் பலி
’’மேலும் 100க்கும் மேற்பட்ட மாடுகள் கானை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கால்நடைத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை’’
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே ஆறாவயல் வளங்காவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் சோலை கண்ணன். இவர்களுக்கு சொந்தமான செம்மறி ஆடுகளை வழக்கம்போல் ஆடு அடைக்கும் கிடையில் அடைத்து வீட்டிற்குச் சென்றுள்ளார். இரவு நேரத்தில் கிடைக்குள் வெறிநாய் புகுந்து அனைத்து ஆடுகளையும் கடித்துக் குதறியது. இதில் 33ஆடுகள் இறந்து கிடந்தன. காலையில் கிடைக்கு சோலை கண்ணன், வந்து பார்த்தபின்னர் தான் ஆடுகள் இறந்தது தெரியவந்துள்ளது. இறந்த ஆடுகளின் மதிப்பு 2 லட்சமாகும். நாய் கடித்து ஆடுகள் இறந்தது அப்பகுதி இடையே சோகத்தை ஏற்படுத்தியது.
கானை நோய் பாதிப்பால் மானாமதுரை அருகே 20க்கும் மேற்பட்ட பசுக்கள் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கீழப்பசளை, சங்கமங்கலம் கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் 1000 மேற்பட்ட மாடுகள் வளர்த்து வருகின்றனர்.கால்நடைகள் வளர்ப்பதை பிரதான தொழிலாக செய்து வருகிறார்கள். தற்போது பெய்து வரும் தொடர் மழையால் மாடுகளுக்கு கானை நோய் என்ற ஒரு வகை அம்மை நோய் மாடுகளின் கால் பாதத்தில் தாக்கும் காரணத்தினால் மாடுகள் நடக்க முடியாமல் நோய்வாய் பட்டு 20 மேற்பட்ட பசு மாடுகள் இறந்துள்ளன.
மேலும் இந்த அம்மை தொற்று நோய் வேகமாக பரவி வருவதால் இந்நோயால் 100 மேற்பட்ட மாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன இதனால் தினமும் மாடுகள் இறந்து வருகின்றன. விவசாயிகள் மிகுந்த அச்சத்திலும் வேதனையில் இருக்கிறார்கள், இந்த அம்மை நோய் தொடர்ந்து பரவமால் இருக்க கால்நடை துறையினர் தங்கள் கிராமங்களுக்கு வந்து மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion