மேலும் அறிய

NASA: நாசா 2024ம் ஆண்டு காலண்டரில் பழனி மாணவிகள் வரைந்த ஓவியம் இடம்பெற்று சாதனை

தொடர்ந்து 5வது முறையாக பழனி ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளின் ஓவியங்கள் நாசா விண்வெளி காலண்டரில் இடம்பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது‌.

நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள 2024ம் ஆண்டு காலண்டரில் பழனி மாணவிகள் வரைந்த ஓவியம் இடம்பெற்று சாதனை படைத்துள்ளது. உலகளவில் நடந்த போட்டியில்  தமிழ்நாட்டு மாணவிகளின் ஓவியம் தேர்வாகியுள்ளது.

NASA: நாசா  2024ம் ஆண்டு காலண்டரில் பழனி மாணவிகள் வரைந்த ஓவியம் இடம்பெற்று சாதனை

திண்டுக்கல் மாவட்டம் பழனியருகே புஷ்பத்தூரில் ஸ்ரீ வித்யா மந்திர் என்ற தனியார் சிபிஎஸ்இ பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1ம் வகுப்பு படிக்கும் துகிலோவியா, 4ம் வகுப்பு படிக்கும் லயாஷினி, 7ம் வகுப்பு படிக்கும் மாணவி தித்திகா ஆகியோர் வரைந்த ஓவியங்கள், 2024ம் ஆண்டின் நாசா விண்வெளி காலண்டரில் இடம்பெற்று சாதனை புரிந்துள்ளது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் ஒவ்வொரு ஆண்டிற்கும்  காலண்டர் வெளியிடுவது வழக்கம்.

NASA: நாசா  2024ம் ஆண்டு காலண்டரில் பழனி மாணவிகள் வரைந்த ஓவியம் இடம்பெற்று சாதனை

அவ்வாறு வெளியிடப்படும் காலண்டரில் இடம்பெறும் பன்னிரெண்டு  பக்கங்களுக்கும் ஒவ்வொரு தலைப்புகள் கொடுக்கப்பட்டு, உலகளவில் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் தேர்வாகும் படங்களை  காலண்டரின் 12 மாதங்களுக்கான பக்கங்களில் பிரசுரிப்பது வழக்கம். இந்நிலையில் 2024ம் ஆண்டு காலண்டருக்கான போட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இந்த போட்டியில் உலகளவில் 194 நாடுகளில் இருந்து நான்கு வயது முதல் பன்னிரெண்டு  வயதிற்குட்பட்ட லட்சக்கணக்கான குழந்தைகள் கலந்துகொண்டனர்.

NASA: நாசா  2024ம் ஆண்டு காலண்டரில் பழனி மாணவிகள் வரைந்த ஓவியம் இடம்பெற்று சாதனை

இந்த போட்டியில் பழனி அருகே உள்ள தனியார் பள்ளியில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியில் 1ம் வகுப்பு படிக்கும் துகிலோவியா, 4ம் வகுப்பு படிக்கும் லயாஷினி, 7ம் வகுப்பு படிக்கும் மாணவி தித்திகா ஆகியோர் சூரிய குடும்பம், ராக்கெட் மற்றும் விண்வெளி கிராஃப்ட், விண்வெளியில் வீரர் ஆகிய தலைப்புகளில் வரையப்பட்ட ஓவியங்கள் நாசா வெளியிட்டுள்ள 2024ம் ஆண்டிற்கான காலண்டரின் அட்டைப்படத்தில் இடம் பெற தேர்வாகியுள்ளது. மேலும் இந்த ஓவியம் அச்சிடப்பட்ட காலண்டர்கள் தேசிய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வைக்கப்பட உள்ளன.

Mayiladuthurai: 33 ரூபாய் கரும்பு 15 ரூபாய்க்கு கொள்முதல் - மயிலாடுதுறை மாவட்டம் விவசாயிகள் வேதனை

உலகளவில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவில்  இருந்து 25 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்றதில் தமிழகத்தை சேர்ந்த மூன்று மாணவிகளின் ஓவியம் தேர்வாகி சாதனை படைத்துள்ளது. தொடர்ந்து 5வது முறையாக பழனி ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளின் ஓவியங்கள் நாசா விண்வெளி காலண்டரில் இடம்பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது‌. ஓவியம் வரைந்து சாதனை படைத்த மாணவிகளை பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget