நத்தம்: 17 வயது காதலியை காற்று துப்பாக்கியால் (AIR GUN) சுட்ட 19 வயது காதலன்
காதலன் காதலியை காற்று துப்பாக்கியால் (AIR GUN) சுட்ட சம்பவம் நத்தம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே துவராபதியை சேர்ந்த 17 வயது சிறுமியை கொட்டாம்பட்டி அருகே உள்ள வெல்லைமலைப்பட்டியை சேர்ந்த வீரையா மகன் செல்லம் (வயது 19) என்பவர் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று துவராபதியில் உள்ள உறவினரின் வீட்டில் நடைபெற்ற விசேஷ நிகழ்ச்சிக்காக வந்த செல்லம் (17 வயது) காதலியை துவராபதி பகுதியில் உள்ள செல்லம் என்பவரின் சித்தப்பாவான அண்ணாமலை என்பவரின் வீட்டில் தனிமையில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர்.
Deepika Ranveer Baby:வா.. வா.. என் தேவதையே.. மகளை வரவேற்றனர் தீபிகா, ரன்வீர் ஜோடி!
அப்போது செல்லம் என்பவருக்கும் வேறு ஒரு பெண்ணிற்கும் தொடர்பு இருப்பதாக கூறி காதலி காதலனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமடைந்த செல்லம் அவரது சித்தப்பாவான அண்ணாமலை என்பவரின் வீட்டில் வைத்திருந்த காற்று துப்பாக்கியால் (AIR GUN) காதலியை சுட்டார். இதில் 17 வயது சிறுமிக்கு மார்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. காயம் அடைந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
காதலியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதை பார்த்த செல்லம் தானும் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆபத்தான நிலையில் இருந்த இருவரையும் திண்டுக்கல் மற்றும் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் ஊரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் விசாரணை செய்து வருகிறார். மேலும் இச்சம்பவம் குறித்து நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். காதலன் காதலியை காற்று துப்பாக்கியால் (AIR GUN) சுட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.