மேலும் அறிய
Advertisement
Crime: ஓடும் பேருந்தில் பெண்ணிடம் 12 சவரன் நகை பறிப்பு - 2 பேர் கைது
மதுரை அருகே ஓடும் பேருந்தில் பெண்ணிடம் 12 பவுன் நகையை பறித்துச் சென்ற இருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை பரவை பகுதியைச் சேர்ந்த ஞானராஜ் மகன் ரமேஷ்குமார் (40) இவர் பிரபல நாளிதழ் ஒன்றில் பிரிண்டிங் பிரிவில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மே 6ஆம் தேதி தனது சொந்த வேலையாக மனைவி ஜெயா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து தூத்துக்குடி செல்லும் பஸ்ஸில் பயணம் செய்திருக்கிறார்.
அப்போது சந்தேகம் படும்படி இரண்டு ஆண்கள் ஒரு பெண் ஆகியோர் தனது குடும்பத்தார்களிடம் ஒட்டி உரசி இருந்ததாகவும், பின்னர் அவர்கள் மதுரை மண்டேலா நகர் வந்தவுடன் இறங்கி சென்று விட்டதாகவும் பின்னர் சிறிது நேரம் கழித்து பார்த்தபோது தங்கள் அணிந்திருந்த 12 பவுன் நகை காணாமல் போனது என்றும் அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
12 சவரன் பறிமுதல்:
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காவல் உதவி ஆணையர் செல்வகுமார் உத்தரவின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலா சம்பவம் நடந்த இடத்திற்கு நேரடியாக சென்று அங்குள்ள சி.சி.டி.வி.,யை பார்த்து புகார்தரிடம் விசாரித்தார் அப்போது ரமேஷ் கொடுத்த அடையாளத்தை வைத்து போலீஸ் தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று புகார்தாரர் அடையாளம் காட்டிய நபர்களை போலீசார் அலங்காநல்லூர் அருகே சென்று அவர்கள் வாகனத்தில் வரும் பொழுது இன்ஸ்பெக்டர் விமலா மற்றும் போலீசார் குற்றவாளிகள் இருவரை பிடித்து விசாரித்ததில் அழகர் கோவில் அப்பன்திருப்பதி அடுத்துள்ள தொப்புளம்பட்டியைச் சேர்ந்த ராஜூஎன்பவரின் மகன் முருகேசன் (48) அலங்காநல்லூரை அடுத்துள்ள ஆதனூரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் பாண்டித்துரை (42) என்பது தெரிய வந்தது இருவரை கைது செய்து அவர்களிடம் இருந்த 12 பவுன் நகையை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - TN 12th Result 2023: பிளஸ்-2 தேர்வில் 514 மதிப்பெண், ஆனால் 4 பாடத்தில் பெயில் அதிர்ச்சியடைந்த மதுரை தம்பதி
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Autism Children: முதல்வர் இதை செய்தால்... ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் வாழ்வில் ஒளி.. மருத்துவர் ராஜலக்ஷ்மி தகவல்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
இந்தியா
உடல்நலம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion