Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் களைகட்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்! தமிழகம் வரும் அமித்ஷா!
Tamilnadu RoundUp: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்; தமிழ்நாடு முழுவதும் நள்ளிரவு முதலே காேலாகலமாக கொண்டாட்டம்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்களில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிப்பு
தமிழ்நாட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு காலை முதலே பக்தர்கள் சிறப்பு பிரார்த்தனை
வேளாங்கண்ணி, சாந்தோம் தேவாலயங்களில் நள்ளிரவு முதலே அலைமோதும் பக்தர்கள்
இலங்கை கடற்படையால் கைப்பற்ற தமிழக படகுகள் 365 படகுகளை கடந்த 10 ஆண்டுகளில் நாட்டுடைமையாக்கியுள்ளது இலங்கை அரசு
இலங்கை அரசால் நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழக படகுகளை மீட்டுத் தர தமிழக மீனவர்கள் கோரிக்கை
வெம்பக்கோட்டை அகழாய்வில் பழங்கால சங்கு வளையல் கண்டுபிடிப்பு
தமிழ்நாடு முழுவதும் வாட்டி வதைக்கும் குளிர்; உதகையில் 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு
மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை மறுநாள் தமிழ்நாடு வருகை; 2 நாள் பயணமாக வருவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு
இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கம்
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சொந்த ஊர் சென்ற பயணிகள் சென்னை திரும்ப சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு
டங்கஸ்டன் சுரங்க ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு முடிவு
சென்னையில் நேற்று நள்ளிரவு மட்டும் 33 பைக்குகள் பறிமுதல் - போக்குவரத்து போலீசார் அதிரடி
கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை, அரையாண்டுத் தேர்வு விடுமுறையை முன்னிட்டு கன்னியாகுமரி உள்ளிட்ட சுற்றுலா இடங்களில் குவிந்த மக்கள்
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாகவே மாநிலத் தகுதித் தேர்வான செட் தேர்வு நடத்தப்படும் - உயர்கல்வி அமைச்சர் திட்டவட்டம்
திண்டுக்கல் தொழிலதிபருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் ரூபாய் 11 கோடி பறிமுதல்
நான் முதல்வன் திட்டம் மூலமாக ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் பயிற்சி பெற்ற தமிழக அரசுப்பள்ளி மாணவிகள் சென்னை திரும்பினர்
ஓசூரில் மாந்தோப்பில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளால் கிராம மக்கள் அச்சம்
வைகுண்ட ஏகாதசி; திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 1.4 லட்சம் டிக்கெட் முன்பதிவு