மேலும் அறிய
Advertisement
மதுரையில் முயலை வேட்டையாடிய 11 பேருக்கு மொத்தம் 5 லட்சம் அபராதம்
வனவிலங்குகள் வேட்டையாடுவதோ, வீட்டில் வளர்ப்பதோ வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி தவறு என வனத்துறை அலுவலர்கள் எச்சரித்து அனுப்பினர்.
உசிலம்பட்டி அருகே முயல் வேட்டையாடிய 11 பேரை கைது செய்த உசிலம்பட்டி வன சரக அலுவலர்கள் - 11 பேருக்கும் தலா 50 ஆயிரம் வீதம் 5 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியை அடுத்துள்ள செட்டிகுளம் பகுதியில் முயல் வேட்டையாடுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உசிலம்பட்டி வனச் சரக அலுவலர் அன்பழகன் தலைமையிலான வனத்துறையினர் அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர்.
மதுரை, உசிலம்பட்டி அருகே முயல் வேட்டையாடிய 11 பேரை கைது செய்த உசிலம்பட்டி வன சரக அலுவலர்கள் - 11 பேருக்கும் தலா 50 ஆயிரம் வீதம் 5 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.,#usilampatti | @Ns7Senthil143 | #forest | #Madurai | @LPRABHAKARANPR3 | @SRajaJourno | @abpnadu | #மதுரை pic.twitter.com/UCblyXywsJ
— arunchinna (@arunreporter92) April 18, 2023
இந்த ஆய்வின் போது செட்டிகுளம் பகுதியில் வேட்டையாடிக் கொண்டிருந்த அடைக்கம்பட்டியைச் சேர்ந்த தினேஷ்குமார், வெள்ளைச்சாமி, ராஜ்குமார், அஜித், சின்னசாக்கிளிபட்டியைச் சேர்ந்த ராமசாமி, சௌந்திரபாண்டி, பழனிமுருகன், ராஜபாண்டி, கார்த்திக், அழகர் மற்றும் வெள்ளைப்பாறைபட்டியைச் சேர்ந்த வடிவேல் என்ற 11 பேரை உசிலம்பட்டி வனச் சரக அலுவலர்கள் கைது செய்து அவர்களிடமிருந்து இறந்த நிலையில் மூன்று முயல்களையும் பறிமுதல் செய்தனர்.
முயல் வேட்டையாடியது தொடர்பாக 11 பேருக்கும் தலா 50 ஆயிரம் விதம் 5 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதித்து, வனவிலங்குகள் வேட்டையாடுவதோ, வீட்டில் வளர்ப்பதோ வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி தவறு என வனத்துறை அலுவலர்கள் எச்சரித்து அனுப்பினர்.,
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரையில் பிரசவித்த பெண்ணுக்கு அனுமதியின்றி குடும்ப கட்டுப்பாடு - அரசு மருத்துவமனை டீனிடம் பரபரப்பு புகார்
மேலும் செய்திகள் படிக்க - பிரபல கோவிலில் சுகாதாரமற்ற மடப்பள்ளி..! கரப்பான் பூச்சி, புறா, எலி தொல்லைகள்..! ஆய்வில் குதித்த உணவு பாதுகாப்புத்துறை..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தஞ்சாவூர்
அரசியல்
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion