மதுரை : மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் நடைபெற்ற 108 வீணை இசை வழிபாடு.. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு !
நேற்று விஜயதசமியை முன்னிட்டு மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் 108 வீணை இசை வழிபாடு. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு, உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். மதுரையின் பல நூற்றாண்டு கால அடையாளமாகவும், மதுரையின் நடுவிலும் மிகப் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. ஆன்மீகம், வரலாறு, கலை, பண்பாட்டு அடையாளங்களுடன் மீனாட்சி கோயில் இன்றளவும் திகழ்கிறது. இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 26-ஆம் தேதி துவங்கிய நவராத்திரி விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
@abpnadu | விஜயதசமியை முன்னிட்டு #மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் 108 வீணை இசை வழிபாடு. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு. 🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜 #madurai #Meenakshi_Sundareswarar_temple pic.twitter.com/T2yvgqUxMK
— arunchinna (@arunreporter92) October 5, 2022
கோயிலில் பல்வேறு கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு பக்தர்கள் வழிபட்டு வந்தனர். ஒவ்வொரு நாளும் மாலையில் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சியளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிலையில் நவராத்திரி விழாவின் 9-ஆம் நாள் விழாவான விஜயதசமியை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர்களின் கல்வி மேம்பாடு வேண்டி கோயில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் 108 வீணை இசை வழிபாடு நடைபெற்றது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்