நடுரோட்டில் சண்டை.. தொடரும் வடகலை - தென்கலை பிரச்னை... பக்தர்கள் அதிர்ச்சி
Vadakalai vs Thenkalai: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வடகலை தென்கலை பிரச்சினை மீண்டும் ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவாமி உற்சவத்தில் நடுரோட்டில் ஸ்தோத்திரம் பாடுவதில் வடகலை தென்கலை இடையே வாக்குவாதம். சாமி தரிசிக்க வந்த பொதுமக்கள் வடகலை தென்கலையே பிரச்சனையால் முகசூலிப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்ம உற்சவம் கடந்த 11ஆம் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து காலை மற்றும் மாலை வேலைகளில் பல்வேறு வகையான வாகனங்களில் வரதராஜ பெருமாள் எழுந்தருளி திருவீதி உலா முக்கிய நகர் வீதி வழியாக 15 கிலோ மீட்டர் தொலைவில் நடைபெறும்.
வரும் 17ஆம் தேதி திருத்தேர் உற்சவம் நடைபெற்று 19ஆம் தேதி தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் நிறைவடைகிறது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவத்தில் 5 நாள் இன்று காலை தங்க பல்லாக்கில் மோகினி அலங்காரத்தில் வரதராஜ பெருமாள் வீதி உலா அதிகாலையில் இருந்து நடைபெற்று வருகிறது.
இரு பிரிவினருக்கிடையே வாக்குவாதம்
தங்க பல்லாக்கில் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பல்வேறு இடங்களில் இன்று மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெறும், ஆகையால் இன்று மாலை 3 மணி அளவில் பேருந்து நிலையம் நெல்லுக்கார வீதி வழியாக சுவாமி வீதி உலா வருகை தந்து கொண்டிருந்தபோது, வடகலை பிரிவினர் ஸ்தோத்திரம் பாடிவந்த நிலையில் அதில் தென்கலை பிரிவினர் உடன் பாடும் பொழுது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடரும் சர்ச்சை
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரம் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளும் இருவர் இடையே சமாதானம் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் திடீரென்று காவல்துறையினிடம் தென்கலை பிரிவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பிரம்மோற்சவம் தொடங்கிய நாளிலிருந்து வடகலை தென்கலை பிரிவினர் இடையே அவ்வப்பொழுது பிரச்சனை ஏற்பட்டு வருவதால் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகின்றனர். சாலையில் வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் ஈடுபட்டுள்ளதால் பக்தர்கள் இடையே முகசுலிபை ஏற்படுத்தியது.






















