Traffic Change Alert: காஞ்சிபுரத்தில் போக்குவரத்து மாற்றம்.. 5 தற்காலிக பேருந்து நிலையம் அறிவிப்பு
Kanchipuram Traffic Change: காஞ்சிபுரத்தில் வருகின்ற 17ஆம் தேதி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. அதேபோன்று 5 தற்காலிக பேருந்து நிலையமும் அமைக்கப்பட உள்ளது.

காஞ்சிபுரத்தில் வரும் 17ஆம் தேதி வரதராஜ பெருமாள் கோவில் திருத்தேர் விழாவை, ஒட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் புறநகர் பகுதிகளில் 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளதாகவும் காவல்துறை அறிவித்துள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி மாத பிரம்மோற்சவம் கடந்த 5 நாட்களாக விமர்சையாக நடைபெற்று வருகிறது. விழாவின் மிக முக்கிய அம்சமாக வரதராஜ பெருமாள் கோவில் தேர் திருவிழா, வரும் 17ஆம் தேதி அன்று நடைபெறுவதால் காஞ்சிபுரத்தில் 5 தற்காலிகப் பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.
தற்காலிகப் பேருந்து நிலையம்
ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னை வழியாக செல்லும் பேருந்துகள் புதிய ரயில்வே நிலையம் பகுதியில் தற்காலிகப் பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது.
மாகரல் மற்றும் உத்திரமேரூர் ஆகிய வழியாக செல்லும் பேருந்துகள் மிலிட்டரி ரோடு பகுதி வரை மட்டுமே இயக்கப்பட வேண்டும்.
வேலூர், பெங்களூர், திருப்பதி வழியாக செல்லும் பேருந்துகள் ஒலிமுகம்மது பேட்டை சந்திப்பு வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள.
தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு வழியாக செல்லும் பேருந்துகள் பழைய ரயில்வே நிலையம் பகுதி வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும்.
வந்தவாசி, சேலம், திருச்சி, திருவண்ணாமலை வழியாக செல்லும் பேருந்துகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதியில் தற்காலிக பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிறுத்தப்படும், என 5 தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை காவல்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இருசக்கர வாகனங்களின் நிலை என்ன ?
பேருந்துகள் மட்டுமே நகரின் உள்பகுதிக்குள் அனுமதிக்க படாது என காவல்துறை அறிவித்துள்ளது. இருசக்கர வாகனங்கள் தேர் இருக்கும் நிலையைப் பொறுத்து குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் குறிப்பிட்ட நேரம், இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி தரப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இருசக்கர வாகனங்கள் மாற்று வழியில் அனுப்பி வைக்கப்படும் எனவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களுடைய பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுமாறும் காவல்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.





















