Kanchipuram Power Shutdown (21-12-2024): காஞ்சிபுரம் மக்களே உஷார்.. நாளை மின்சாரம் இருக்காது..!
Kanchipuram Power Shutdown 21-12-2024: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஓரிக்கை மற்றும் பழையசீவரம் ஆகிய பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளன.
Kanchipuram Power Power Cut: மின்சாரம் இன்றைய காலகட்டத்தில் மிகவும் தேவையான ஒன்றாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசு சார்பில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் மாதத்திற்கு ஒருமுறை பராமரிப்பு பணி காரணமாக மின்தடை மேற்கொள்வது வழக்கமான ஒன்றாக இருந்து வருகின்றது.
துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ளும் காலகட்டத்தில், காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை மின் நிறுத்தும் மேற்கொள்வது வழக்கமாக இருக்கிறது. சில சமயங்களில் ஒவ்வொரு துணை மின் நிலையத்திற்கும் நேரம் மாறுபடும். மின்சார துறை சார்பில் மின் நிறுத்தும் மேற்கொள்வதற்கு முன்பு அது குறித்து அறிவிப்புகளும் வெளியிடப்படும். அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (21-12-2024) மின்தடை மேற்கொள்ளப்பட உள்ள இடங்கள் குறித்து நாம் தெரிந்து கொள்வோம்.
காஞ்சிபுரம் பழையசீவரம் துணை மின்நிலையம்:
ஏகனாம்பேட்டை, புதுப்பேட்டை, நாயக்கன்பேட்டை, சீயமங்கலம், பூசிவாக்கம், தாங்கி, களியனுார், வில்லிவலம், கருக்குப்பேட்டை, அங்கம்பாக்கம், அவளூர், தம்மனுார், கம்பராஜபுரம், கட்டவாக்கம், வாரணவாசி.
மதுார், அருங்குன்றம், சித்தாலப்பாக்கம், வடக்குப்பட்டு, எழிச்சூர், பாலுார், மேலச்சேரி, உள்ளாவூர், பழையசீவரம், வாலாஜாபாத், கிதிரிப்பேட்டை, புத்தகரம், கீழ்ஒட்டிவாக்கம், வெண்குடி, திம்மராஜாம்பேட்டை.
தென்னேரி, தென்னேரி அகரம், மச்சமேடு, ஊத்துக்காடு, தொள்ளாழி, தேவரியம்பாக்கம், நத்தாநல்லுார், சங்கராபுரம், புளியம்பாக்கம், சிறுபாகல், பூதேவி, பினாயூர், சீத்தனஞ்சேரி. சாத்தனஞ்சேரி, கரும்பாக்கம், காவடிபாக்கம், சிறுமயிலுார், திருமுக்கூடல், ஆனம்பாக்கம், பட்டா, சிறுதாமூர், நெற்குன்றம், நீர்குன்றம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்னிறுத்தம் செய்யப்பட உள்ளது.
ஓரிக்கை துணை மின் நிலையம்
காஞ்சிபுரம் நகரில் சில பகுதிகளான, வள்ளல் பச்சையப்பன் தெரு, கீரை மண்டபம், ரங்கசாமி குளம் பகுதிகள், காமராஜர் வீதி, மேட்டுத்தெரு, சின்ன காஞ்சிபுரம், பெரியார் நகர், தேனம்பாக்கம், முத்தியால்பேட்டை, களக்காட்டூர் பகுதி, திருக்காலிமேடு, சேக்குப்பேட்டை வடக்கு, தெற்கு மற்றும் நடுத்தெரு, எண்ணைக்கார தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், டோல்கேட், விஷார், மாமல்லன் நகர், காந்திரோடு, ஐயம்பேட்டை, வேளிங்கப்பட்டரை, T.K.நம்பி தெரு, டெம்பிள் சிட்டி, வர்தமான் நகர், நாகலுத்து மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி விளக்கொளி பெருமாள் தெரு, ஓரிக்கை, ஓரிக்கை தொழிற்பேட்டை, அண்ணா குடியிருப்பு, சதாவரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சுற்றியுள்ள பகுதிகள், செவிலிமேடு, பாலாறு தலைமை நீரேற்றம், சங்குசா பேட்டை ஆகிய பகுதிகளில் வரும் 21.12.2024 சனிக்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை மின் தடை ஏற்படும்.