முதலமைச்சர் கையில் காஞ்சி வங்கி வாங்கிய விருது..! அட இது சூப்பர் சாதனையப்பா ..!
காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக செயல்பட்டதால் சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் விருதினை வழங்கினார்
காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கிக்கு, சுதந்திர தின விழாவில் சிறப்பாக செயல்பட்ட வங்கி என்ற விருதினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சுதந்திர தின விருதுகள்
சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் நல்லவனுக்காக சிறப்பாக செயல்பட்ட நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சிறந்த மத்திய கூட்டுறவு வங்கி என்ற விருதினை , காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பிடித்துள்ளது.
காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி
காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி 1915 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. தற்பொழுது நிலையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 52 கிளைகளும், 264 தொடக்க வேளாண் கூட்டுறவு மையங்களும் உள்ளன. வங்கியில் உறுப்பினர்களாக 863 பேரும் , ஐந்து அம்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களும் உள்ளனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் உதவி
இந்த வங்கியில் கடந்த ஆண்டு மற்றும் தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக, 831 மாற்றுத்திறனாளிகளுக்கு சுமார் 4.29 கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் தள்ளுவண்டி கடைகள், சிறு மல்லிகை கடைகள், ஜெராக்ஸ் கடைகள் என பல வகையில் தொழில் செய்து வருவதால் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. இதுபோக மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு உரிமை சங்கம் கொடுத்த, ஆணையின் அடிப்படையில் 22 மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு கட்டுவதற்காக மூன்று லட்ச ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு 10 கோடி இலக்கு
மேலும் வாரம் தோறும் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, இந்த ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகளவு கடன்கள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இந்த ஆண்டு அரசு நிர்ணயித்த இலக்காக 6 கோடி இருந்தாலும் 10 கோடியாக வங்கி சார்பில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இரண்டு மாதத்தில் மூன்று கோடி ரூபாய் அளவிற்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தான் காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு தமிழ்நாடு அரசு விருது வழங்கி கௌரவிக்க உள்ளது
இதுகுறித்து கூடுதல் பதிவாளர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் நம்மிடம் தெரிவிக்கையில், தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்காக கடன்கள் வழங்குவதில் நமது வங்கி முன்னணியாக திகழ்கிறது. மாற்றத்திறனாளிகளுக்கு பல வகையில் கொடுக்கின்ற கடன்கள் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த ஆண்டு 10 கோடி ரூபாய் இழப்பு நிர்ணயம் செய்து பயணித்து வருகிறோம். விருது அறிவித்த தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் நன்றி என தெரிவித்தார்.
விருது வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர்
இந்தநிலையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்பாக பணியாற்றிய பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு சுதந்திர தின விழாவில் பாராட்டு சான்றிதழ் மற்றும் விருதுகளை வழங்கி கௌரவித்தார். அந்த வகையில் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்குவதில் சிறப்பாக செயல்பட்டதால் விருது வழங்கப்பட்டது. இந்த விருதுநகர் கூடுதல் பதிவாளர் மற்றும் வங்கியின் மேலாண்மை இயக்குனர் சிவமலர் தமிழ்நாடு முதலமைச்சர் கையில் எடுத்துக்கொண்டார்.