மேலும் அறிய

கோயிலில் தொடரும் வடகலை தென்கலை மோதல்..! காஞ்சியில் நடப்பது என்ன?

Vadakalai vs Thenkalai : "நீண்டு கொண்டே செல்லும் இந்த பிரச்சனைக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஏன் நிரந்தர தீர்வு காண இயலவில்லை என பொதுமக்கள் கேள்வி "

கோயில்களின் நகரம் என சிறப்பு பெற்ற காஞ்சியில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வடகலை - தென்கலை பிரிவினர் இடையே ஏற்பட்ட 2 வது நாளில் ஏற்பட்ட மோதல் வீதிக்கு வந்தது. டிக்ஸ்னரியில் கூட காண முடியாத வார்த்தைகளையும்,  இலக்கண புத்தகத்தில் கூட கண்டுபிடிக்க முடியாத நா கூசும் அவ சொற்களையும் , பொதுமக்கள் மத்தியில் வடகலை தென்கலையினர் பேசிய பேச்சை கண்டு காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.  

வடகலை - தென்கலை    

கோயில் விழாக்களில் திவ்ய பிரபந்தமோ, வேத பாராயணமோ இரு பிரிவினரும் கோஷ்டிகள் பாட கூடாது என கோயில் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நேற்று கங்கைகொண்டான் மண்டபத்தில் மண்டகப்படி கண்டருளி பக்தர்களுக்கு வரதர் காட்சி அளிக்கும்போது,  தாத்தாச்சாரி குடும்பத்தினர் "மந்திர புஷ்பம்" எனும் வேத மந்திரங்களை  பாட தென் கலை பிரிவினரும்  பாடுவோம் என கூற வாக்குவாதம் ஏற்பட்டது. கோவில் நிர்வாகத்தின் உத்தரவையும் மீறி வேத பாராயணம் செய்ததால்  காவல்துறையினர் சமாதானம் செய்து வைத்தனர். 

கோயிலில் தொடரும் வடகலை தென்கலை மோதல்..! காஞ்சியில் நடப்பது என்ன?

" நா கூசும் வார்த்தைகளால் "

இந்நிலையில்,   கோவிலில் இருந்து வரதர் கிளம்பி சுமார் 12 வீதிகள் வழியாக அருள் பாலித்த படி, பேருந்து நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருந்தபோது, இரண்டாவது நாளாக மீண்டும் தென்கலை - வடக்கலை இடையே கடும் மோதல் ஏற்பட்டது. சுற்றிலும் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் உள்ளனர் என்பதை கூட பார்க்காமல்,   வடகலை -  தென்கலை என இரு பிரிவினரும் பேசவே "நா கூச்சம் அவ சொற்களை" மக்கள் மத்தியில் மாறி மாறி பேசி திட்டி கொண்டனர்.

கோயிலில் தொடரும் வடகலை தென்கலை மோதல்..! காஞ்சியில் நடப்பது என்ன?

கோயில் நிர்வாகிகள் முன்னிலையில்  

பல ஆண்டுகளாக கோயில் வளாகத்துக்குள்ளையே நடந்த இந்த வாக்குவாதம் தற்போது வீதிக்கு வந்துவிட்டது என பொதுமக்கள் புலம்புகின்றனர். நீதிமன்ற வழிகாட்டல்கள் இருந்தும் இந்த பிரச்சனைக்கு இந்து சமய அறநிலையத்துறை செயலாளரோ அல்லது அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்களோ தீர்வு காண ஏன் முற்படவில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். வடக்கலை தென்கலை பிரச்சினையால் நாங்கள் முழு மனதுடன் பெருமாளை தசிக்க முடியவில்லை என பக்தர்கள் புலம்புகிறார்கள். இந்த மோசமான சம்பவங்கள் அனைத்தும் கோவில் நிர்வாகிகள் முன்னிலையில் நடந்து வருகின்றன.

முகம் சுளிக்கும் பக்தர்கள் 

தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற  வடகலை மற்றும் தென்கலை  இரு பிரிவினருக்கு இடையே பலதரப்பு பிரச்சனைகள் நடந்த வண்ணம் உள்ளன. இதனால் நிம்மதியாக சாமியை தரிசிக்க வரும் பக்தர்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். சில சமயங்களில் எல்லை மீறி தகாத வார்த்தைகளில் பேசி கொள்வதும்,  அவ்வப்பொழுது அரங்கேறுவதால் பொதுமக்களும் பக்தர்களும் அவதி அடைகின்றனர்.

கோயிலில் தொடரும் வடகலை தென்கலை மோதல்..! காஞ்சியில் நடப்பது என்ன?

பத்து நாட்கள் நடக்கும் உற்சாகங்களில் முன்பெல்லாம் ஏதாவது ஒரு நாட்களில் மட்டுமே இது போன்ற சண்டையில் இரு பிரிவினரும் ஈடுபட்டு வந்தனர்.  ஆனால் இந்த ஆண்டு நடைபெறும்  வைகாசி பிரம்மோற்சவ விழாவில் தினமும் இரண்டு பிரிவினரும் சண்டை போட்டு வருவது,  பக்தர்களிடையே எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.  கடவுள் முன்னால் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்,  இருக்கிறது நிம்மதியாக சாமி தரிசனம் மேற்கொள்ள முடியவில்லை என பக்தர்கள் புலம்புகின்றனர்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
2000 போலீஸ் பாதுகாப்பு; 30,000 பேர் பங்கேற்பு - களைகட்டப்போகும் திமுக பவள விழா பொதுக்கூட்டம்
2000 போலீஸ் பாதுகாப்பு; 30,000 பேர் பங்கேற்பு - களைகட்டப்போகும் திமுக பவள விழா பொதுக்கூட்டம்
ஒடிசாவில் வெடித்த மதக்கலவரம்.. பேஸ்புக் பதிவால் வந்த வினை.. தொடரும் பதற்றம்!
ஒடிசாவில் வெடித்த மதக்கலவரம்.. பேஸ்புக் பதிவால் வந்த வினை.. தொடரும் பதற்றம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | கேள்வி கேட்டா அசிங்க படுத்துவீங்களா? நான்வருவேன் அப்போ தெரியும்! நாள் குறித்த ராகுல்!Thrissur ATM Robbery | GUNSHOT.. CHASING.. ஹரியானா கொள்ளையர்கள் சிக்கியது எப்படி? Namakkal ContainerThiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
2000 போலீஸ் பாதுகாப்பு; 30,000 பேர் பங்கேற்பு - களைகட்டப்போகும் திமுக பவள விழா பொதுக்கூட்டம்
2000 போலீஸ் பாதுகாப்பு; 30,000 பேர் பங்கேற்பு - களைகட்டப்போகும் திமுக பவள விழா பொதுக்கூட்டம்
ஒடிசாவில் வெடித்த மதக்கலவரம்.. பேஸ்புக் பதிவால் வந்த வினை.. தொடரும் பதற்றம்!
ஒடிசாவில் வெடித்த மதக்கலவரம்.. பேஸ்புக் பதிவால் வந்த வினை.. தொடரும் பதற்றம்!
பூர்வீக சொத்தில் பங்கு தராத ஆத்திரம்: மாமியாரை அரிவாளால்  வெட்டி கொன்ற மருமகனுக்கு ஆயுள் தண்டனை
பூர்வீக சொத்தில் பங்கு தராத ஆத்திரம்: மாமியாரை அரிவாளால் வெட்டி கொன்ற மருமகனுக்கு ஆயுள் தண்டனை
October Launch Cars: அக்டோபரில் வெளியாக உள்ள புதிய கார்கள், எஸ்யுவிக்கள்..! லிஸ்ட் இதோ, உங்க சாய்ஸ் எது?
October Launch Cars: அக்டோபரில் வெளியாக உள்ள புதிய கார்கள், எஸ்யுவிக்கள்..! லிஸ்ட் இதோ, உங்க சாய்ஸ் எது?
Fire cracker Accident: சாத்தூர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து - ஆட்கள் சிக்கியுள்ளனரா?
சாத்தூர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து - ஆட்கள் சிக்கியுள்ளனரா?
Hosur Fire Accident: ஓசூரில் டாடா செல்போன் உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து - பதறி ஓடிய தொழிலாளர்கள்
Hosur Fire Accident: ஓசூரில் டாடா செல்போன் உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து - பதறி ஓடிய தொழிலாளர்கள்
Embed widget