மேலும் அறிய

Christmas : அன்பென்ற மழையிலே.. 500 ஆண்டு பழமையான அந்தோணியார் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலம்

மல்லிகாபுரத்தில் 500 ஆண்டு பழமையான அந்தோணியார் தேவாலயத்தில் கிறிஸ்மஸ் விழா கொண்டாட்டம்

உத்திரமேரூர் அடுத்த மல்லிகாபுரத்தில் 500 ஆண்டு பழமையான அந்தோணியார் தேவாலயத்தில் கிறிஸ்மஸ் விழா கொண்டாட்டம். 
 
கிறிஸ்துமஸ் திருநாள்

கிறிஸ்தவர்களால் இறைவனாக போற்றப்படும் இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளான இன்று கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துவர்களின் முக்கியமான பண்டிகை நாளான இன்று, உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவு முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்து, சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். சாதி, மத பேதமின்றி மேலும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதையொட்டி அனைத்து தேவாலயங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டதோடு, இயேசு பிறந்ததை சித்தரிக்கும் வகையில் ஆட்டு கொட்டகையுடன் கூடிய குடிலும் அமைக்கப்பட்டு உள்ளது.

Christmas : அன்பென்ற மழையிலே.. 500 ஆண்டு பழமையான அந்தோணியார் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலம்
 
500 ஆண்டுகள் பழமையான அந்தோணியார் ஆலயம்
 
உலகம் முழுவதும் கிறிஸ்து பிறப்பின் நாளான கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்துள்ள மல்லிகாபுரத்தில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான அந்தோணியார் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.  அந்த ஆலயத்தின் பங்கு தந்தை வினோத் ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கிறிஸ்மஸ் சிறப்பு பிரார்த்தனையில் குழந்தை இயேசு பாலன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். 
 
மாட்டு தொழுவத்தில் இயேசு கிறிஸ்து பிறந்த நினைவாக குழந்தை இயேசுவின் ஸ்வரூபமானது ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மாட்டுத் தொழுவம்போல அலங்கரிக்கப்பட்ட குடிலில் வைத்து சிறப்பு பூஜைகளும் பிரார்த்தனைகளும் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடி ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொண்டனர். உலக நாடுகளில் அன்பும் அமைதியும் நிலவ சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.
 
வேளாங்கண்ணி கொண்டாட்டம்:

உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.வேளாங்கண்ணி விண்மீன் ஆலயம் அருகே உள்ள சேவியர் திடலில் சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலியினை பேராலய அதிபர் இருதயராஜ் நிறைவேற்றினார். அதனை தொடர்ந்து ஏசு கிறிஸ்து பிறப்பு நற்செய்தி வாசிக்கப்பட்டு குடிலில் பிறந்த குழந்தை ஏசுவின் பாதத்தில் பாதிரியார்கள் முத்தமிட்டனர். பின்னர் குழந்தை இயேசு பிறப்பின்போது ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். விழாவில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்

Christmas : அன்பென்ற மழையிலே.. 500 ஆண்டு பழமையான அந்தோணியார் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலம்

300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு

பலர் கலந்துகொண்டு கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போது தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் பெரு மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. விழாவையொட்டி வேளாங்கண்ணியில் மாவட்ட  கண்காணிப்பாளர் ஹர்சிங் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வேளாங்கண்ணிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பக்தர்கள் மாதாவை தரிசனம் செய்துவிட்டு கடலில் சென்று நீராடுவதை வழக்கமாக வைத்திருப்பதால் இரவிலும் அங்கு செல்லக்கூடும் என்ற காரணத்தால் மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவண பாபு தலைமையில் தீனைப்பு மற்றும் மீட்பு துறையினர் காவல்துறையிடம் இணைந்து கடற்கரைப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"இன்னைக்கு ஒரு புடி" கயானாவில் பிரதமர் மோடிக்கு சூப்பர் விருந்து.. மெய் மறந்துட்டாரு!
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்கடுப்பேற்றிய நிர்வாகிகள்! கிளம்பிய தமிழிசை,வானதி! ஆபரேஷன் அதிமுகSathyaraj About TVK : ”தவெக - வில் பதவி கொடுங்க” ரூட் மாறும் சத்யராஜ்! கடுப்பில் திமுக?Amaran Issue News : ”எனக்கு 1.1 கோடி கொடுங்க” டார்ச்சர் கொடுக்கும் மாணவன் தினுசான சிக்கலில் அமரன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"இன்னைக்கு ஒரு புடி" கயானாவில் பிரதமர் மோடிக்கு சூப்பர் விருந்து.. மெய் மறந்துட்டாரு!
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை..  டிராபிக் குறையுமா?
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை.. செம்ம அப்டேட்டா இருக்கே!
நான் சொல்வதை கேளுங்க! விஜய்க்கு புரட்சித்தலைவரின் குணம்! - செல்லூர் ராஜு
நான் சொல்வதை கேளுங்க! விஜய்க்கு புரட்சித்தலைவரின் குணம்! - செல்லூர் ராஜு
களமிறக்கப்பட்ட 10,000 ராணுவ வீரர்கள்.. மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்!
களமிறக்கப்பட்ட 10,000 ராணுவ வீரர்கள்.. மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்!
TN Rain Updates: உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! அடுத்த 7 நாட்களுக்கு கனமழை இருக்கு.!மாவட்டங்கள் லிஸ்ட் இதோ.!
TN Rain Updates: உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.!அடுத்த 7 நாட்களுக்கு கனமழை பெறும் மாவட்டங்கள் லிஸ்ட் இதோ.!
Embed widget