நெரிசலுக்கு முற்றுப்புள்ளி! ஒரகடம்-செய்யார் சிப்காட் இணைப்பு சாலை: 362 கோடி நிதி! போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு!
Oragadam- cheyyar Sipcot link road: "ஒரகடம் - செய்யார் சிப்காட் இணைப்பு சாலைக்கு நிலம் எடுக்க 362 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது"

சென்னை புறநகர் மாவட்டமாக இருக்கக்கூடிய காஞ்சிபுரம் மாவட்டம், தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டமாக இருந்து வருகிறது. ஸ்ரீபெரும்புதூர், இருங்காடு கோட்டை, சுங்குவார்சத்திரம், ஒரகடம் மற்றும் படப்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அதேபோன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புதிய தொழிற்சாலைகள் மற்றும் புதிய நிறுவனங்கள் தொடங்கட்டும் வருகின்றன.
செய்யாறு சிப்காட் - Cheyyar Sipcot
அதேபோன்று காஞ்சிபுரத்தில் அருகே இருக்கக்கூடிய திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்ட, மாங்கால் பகுதியில் செய்யார் சிப்காட் இயங்கி வருகின்றன. செய்யார் சிப்காட் பகுதியில் உற்பத்தியாகும் பொருட்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அவர் செய்யார் சிப்காட் பகுதியில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு செல்வதற்காக, காஞ்சிபுரம் வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதனால் காஞ்சிபுரம் நகரின் வெளிப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காஞ்சிபுரம் நகரின் வெளிப்பகுதிகளில் பெரிய கண்டெய்னர் லாரிகளில் இயக்குவதிலும் சிக்கல் நீடித்து வருகிறது. இதனால் விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது.
இணைப்பு சாலை அமைக்க வேண்டிய கட்டாயம் - Oragadam- cheyyar link road
போக்குவரத்து நெரிசல் மட்டுமில்லாமல், நீண்ட தூரம் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டிய சூழலும் இருந்து வந்தது. இதனால் நேரம் விரையமும் ஏற்பட்டு வருகிறது. செய்யார் சிப்காட் பகுதிக்கு செல்ல புதிய இணைப்பு சாலை அமைக்க வேண்டிய தேவை பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. இதனால் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே புதிய நான்கு வழி சாலை அமைத்து, அதன் மூலம் செய்யார் சிப்காட் இணைப்பதற்கான பணிகள் துவங்கியுள்ளன.
புதிய நான்கு வழிச்சாலை
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே, சிங்கப்பெருமாள் கோயில் - ஸ்ரீபெரும்புதூர் இடையிலான சாலையில் இந்த சாலையை அமைக்க போக்குவரத்து துறை முடிவெடுத்துள்ளது. ஒரகடம் அருகில் இருந்து செய்யாறு சிப்காட் வரை 43 கிலோமீட்டர் தூரத்திற்கு புதியதாக இந்த சாலை அமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த 30 கிராமங்கள் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த 3 கிராமங்கள் என 33 கிராமங்கள் வழியாக இந்த சாலை அமைய உள்ளது.
சாலை எங்கு துவங்குகிறது ?
இந்த புதிய நான்கு வழி சாலை காஞ்சிபுரம் மாவட்டம் வளையங்கரணை பகுதியில் இருந்து, பாலூர், பழைய சிகரம், மதூர், புத்தளி , அழிசூர் வழியாக செய்யார் சிப்காட் மற்றும் மானாமதி ( பழவேரி, சிலாம்பாக்கம்) கூட்ரோடு வரை இந்த சாலை முறை வருகிறது. இந்த சாலை திட்டத்திற்காக 33 கிராமங்களில் நிலம் எடுக்கும் பணி துவங்கியுள்ளது. சுமார் 60 மீட்டர் அகலத்திற்கு சாலை அமைக்க நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான நிலம் எடுக்கும் பணியினை காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
362 கோடி நிதி ஒதுக்கீடு
சாலை அமைப்பதற்காக 492 ஏக்கர் பட்டா நிலங்களும், 127 ஏக்கர் அரசு நிலங்களும் கையகப்படுத்தப்பட உள்ளன. நிலங்களை கையகப்படுத்தும் விவசாயிகளுக்கு மற்றும் பொதுமக்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதற்காக 362 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஓராண்டுக்குள் நில எடுப்பும் பணிகளை முடிக்க இலக்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சாலையின் சிறப்பு அம்சங்கள் என்ன ?
இந்த சாலை பயன்பாட்டிற்கு வந்தால் காஞ்சிபுரம் நகரின் வெளிப்பகுதிகளில் பெரும் அளவு போக்குவரத்து நெரிசல் குறையும்.
சென்னையில் வந்தவாசி மற்றும் செய்யார் செல்பவர்களுக்கு முக்கிய சாலையாக இந்த சாலை உருவெடுக்கும்.
வந்தவாசி அருகே உள்ள மானாமதி பகுதியில் சிப்காட் வர உள்ள நிலையில், அதற்கும் இந்த சாலை பயனுள்ளதாக அமையும்.
செய்யார் சிப்காட் பகுதியில் இருந்து இருந்து சென்னை துறைமுகத்திற்கு செல்வதற்கு, இந்த சாலை வரப்பிரசாதமாக அமையும்.





















