மேலும் அறிய

மக்களவை தேர்தலில் மகளிர் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படுமா? உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்ன?

மக்களவை தேர்தலுக்கு முன்பு மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்க மத்திய அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் 33 சதவிகிதம் இடங்களை பெண்களுக்கு ஒதுக்கும் மசோதாவை நிறைவேற்ற பல ஆண்டுகளாக முயற்சி மேற்கொள்ளப்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கடந்த 2010ஆம் ஆண்டு, மாநிலங்களவையில் நிறைவேற்றியது. ஆனால், மக்களவையில் நிறைவேற்ற முடியவில்லை.

கடந்த 13 ஆண்டுகளாக மக்களவையில் நிறைவேற்றப்படாமல் இருந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை பாஜக தலைமையிலான அரசு மக்களவை, மாநிலங்களவை என இரண்டு அவைகளிலும் கடந்தாண்டு நிறைவேற்றியது. மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்தார்.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா எப்போது அமல்படுத்தப்படும்?

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு, மகளிர் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், இந்தாண்டு மக்களவை தேர்தலிலேயே மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. 

106ஆவது அரசியலமைப்பு திருத்தம் மூலம் இந்த மகளிர் இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு மகளிர் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என அரசியலைப்பு திருத்தத்தில் குறிப்பிடப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஜெயா தாக்கூர் என்பவர் தொடர்ந்த மனுவில், "குறிப்பிட்ட அந்த வாசகத்தை மட்டும் செல்லாது என அறிவிக்க வேண்டும். சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பு திருத்தத்தை காலவரை இன்றி தள்ளி வைக்கக்கூடாது" என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எஸ். வி. என். பட்டி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது.

உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்ன?

நேற்று நடைபெற்ற விசாரணையில், இது தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. மனுதாரர் ஜெயா தாக்கூர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், "பொதுத் தேர்தலுக்கு முன்பாக இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதை உறுதி செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்றார்.

இரு தரப்பு வாதத்தை கேட்ட உச்ச நீதிமன்றம், "இந்த கட்டத்தில் நீதிமன்றம், உத்தரவு பிறப்பிக்க முடியாது. மத்திய அரசின் பதிலுக்காக காத்திருங்கள்" என தெரிவித்தது. இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக மனு தாக்கல் செய்ய விரும்புவதாக வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கூறினார்.

இதற்கு பதில் அளித்த நீதிமன்றம், "இது, புதிய மனுவாக இருப்பதால், தலைமை நீதிபதி சந்திரசூட் அமைக்கும் அமர்வின் முன்புதான் வழக்கு பட்டியலிடப்படும்" என தெரிவித்தது. இறுதியாக, இந்த வழக்கின் தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு 2 வாரம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணை 3 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Kashish Methwani: சர்வதேச அழகி டூ ராணுவ அதிகாரி; இணையத்தை கலக்கும் காஷிஷ் மெத்வானி- யார் இவர்?
Kashish Methwani: சர்வதேச அழகி டூ ராணுவ அதிகாரி; இணையத்தை கலக்கும் காஷிஷ் மெத்வானி- யார் இவர்?
பூனை கருவுற்றதால் இரு வீட்டார் இடையே சண்டை.. அனாதையான 4 குட்டிகள்!
பூனை கருவுற்றதால் இரு வீட்டார் இடையே சண்டை.. அனாதையான 4 குட்டிகள்!
Top 10 News Headlines: எகிறிய தங்கம் விலை, தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடிய மோடி, நிதிஷ் இன்று ராஜினாமா, ட்ரம்ப் அதிரடி - 11 மணி செய்திகள்
எகிறிய தங்கம் விலை, தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடிய மோடி, நிதிஷ் இன்று ராஜினாமா, ட்ரம்ப் அதிரடி - 11 மணி செய்திகள்
Bihar New CM: நிதிஷ் கதை ஓவர்..! பீகாரின் புதிய முதலமைச்சர் யார்? குழாயடி சண்டையில் BJP டிக் அடித்தது யாரை?
Bihar New CM: நிதிஷ் கதை ஓவர்..! பீகாரின் புதிய முதலமைச்சர் யார்? குழாயடி சண்டையில் BJP டிக் அடித்தது யாரை?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pope Leo Vs Trump: “அவருக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்“; தன்னை விமர்சித்த ட்ரம்ப்புக்கு போப் லியோ தில்லான பதிலடி
“அவருக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்“; தன்னை விமர்சித்த ட்ரம்ப்புக்கு போப் லியோ தில்லான பதிலடி
TN BJP Election Manifesto: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம்; விவசாயிகளுக்கு ரூ.19 ஆயிரம்- வாக்குறுதிகளை அள்ளி வீசிய தமிழக பாஜக
TN BJP Election Manifesto: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம்; விவசாயிகளுக்கு ரூ.19 ஆயிரம்- வாக்குறுதிகளை அள்ளி வீசிய தமிழக பாஜக
’’இபிஎஸ்ஸை தரம் தாழ்ந்து விமர்சிக்கும் முதல்வர் ஸ்டாலின்; எங்களையும் பேச வச்சிடாதீங்க’’- அன்புமணி
’’இபிஎஸ்ஸை தரம் தாழ்ந்து விமர்சிக்கும் முதல்வர் ஸ்டாலின்; எங்களையும் பேச வச்சிடாதீங்க’’- அன்புமணி
China Warns America: “எங்க கப்பல் மேல கை வச்சா...“; அமெரிக்காவுக்கு சீனா நேரடி வார்னிங்; ரணகளமாகும் ஹார்முஸ் ஜலசந்தி
“எங்க கப்பல் மேல கை வச்சா...“; அமெரிக்காவுக்கு சீனா நேரடி வார்னிங்; ரணகளமாகும் ஹார்முஸ் ஜலசந்தி
USA Iran War: உரிமைய ஏத்துக்கங்க, இல்லைன்னா சண்டைக்கு வாங்க” - ஈரான் ”ஆபத்தானது” என சீனா வார்னிங்
USA Iran War: உரிமைய ஏத்துக்கங்க, இல்லைன்னா சண்டைக்கு வாங்க” - ஈரான் ”ஆபத்தானது” என சீனா வார்னிங்
Tata EV Car Offers: மின்சார கார்களுக்கு கோடைத் தள்ளுபடி! டாடாவின் எந்த EV காருக்கு எவ்ளோ ஆஃபர்?
Tata EV Car Offers: மின்சார கார்களுக்கு கோடைத் தள்ளுபடி! டாடாவின் எந்த EV காருக்கு எவ்ளோ ஆஃபர்?
CBSE 10th Result: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - டிஜிலாக்கரில் மார்க்‌ஷீட் டவுன்லோட் செய்வது எப்படி? APAAR ஐடி
CBSE 10th Result: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - டிஜிலாக்கரில் மார்க்‌ஷீட் டவுன்லோட் செய்வது எப்படி? APAAR ஐடி
Mahindra Thar Price Hike: தார் SUV பிரியர்களுக்கு அதிர்ச்சி.! மீண்டும் விலையை உயர்த்திய மஹிந்திரா; அதுக்காக இவ்வளவா.?
தார் SUV பிரியர்களுக்கு அதிர்ச்சி.! மீண்டும் விலையை உயர்த்திய மஹிந்திரா; அதுக்காக இவ்வளவா.?
Embed widget