மேலும் அறிய

Boycott Maldives : "மாலத்தீவு போகாதீங்க" - பிரதமர் மோடிக்கு ஆதரவாக ரவுண்டு கட்டிய சினிமா பிரபலங்கள்!

Boycott Maldives : லட்சத்தீவு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு ஆதரவாக சினிமா பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Boycott Maldives : கடந்த சில நாட்களுக்கு முன்பு லட்சத்தீவுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கு ரூ.1,150 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். தன்னடைய பயணத்தின் அனுபவத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த மோடி, "லட்சத்தீவுகளின் பிரமிக்க வைக்கும் அழகையும் அதன் மக்களின் நம்பமுடியாத அரவணைப்பையும் கண்டு நான் இன்னும் பிரமிப்பில் இருக்கிறேன்.  

சர்ச்சையான மோடியின் லட்சத்தீவு பயணம்:

லட்சத்தீவு என்பது வெறும் தீவுகளின் கூட்டமல்ல. காலம் காலமாக நீடித்து வரும் பாரம்பரிய மரபு மற்றும் மக்களுக்கான சான்று அது. கற்பதற்கும், வளர்வதற்குமான வாய்ப்பாக எனது லட்சத்தீவு பயணம் அமைந்தது.  அகத்தி, பங்காரம், கவரத்தி போன்ற பகுதிகளில் மக்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது.

லட்சத்தீவு மக்களின் விருந்தோம்பலுக்கு நான் நன்றி கூறுகிறேன்" என்று பதிவிட்டிருந்தார். பிரதமர் மோடியின் பதிவு இணையத்தில் வைரலாகி வந்தது. இதற்கு பலரும் லட்சத்தீவை மாலத்தீவுடன் ஒப்பிட்டு, மாலத்தீவை விட லட்சத்தீவு சிறந்தது என்று பதிவிட்டு வந்தனர்.  

இதனை அடுத்து, மாலத்தீவு அரசியல் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு எதிராக இந்தியர்களை கேலி செய்தும்,  தரக்குறைவான கருத்துகளை பகிர்ந்தனர். இதனால், இந்தியர்கள் மாலத்தீவுக்கு செல்வதை புறக்கணிக்க வேண்டும் என்று கூறினர். Boycott Maldives எனும் ஹேஷ்டேக்கையும்  இணையத்தில் பதிவிட்டனர். 

மோடிக்கு ஆதரவாக இறங்கிய பிரபலங்கள்:

இந்த நிலையில், பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை ஆதரிக்கும் வகையில், பாலிவுட் நடிகர்களான அக்ஷய் குமார், சல்மான் கான், ஷ்ரத்தா கபூர், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் அக்ஷய் குமார் கூறியதாவது, "இந்தியர்கள் மீது வெறுக்கத்தக்க மற்றும் இனவெறி கருத்துகளை அனுப்பும் மாலத்தீவைச் சேர்ந்த முக்கிய நபர்கள் கூறியிருக்கின்றனர்.

Boycott Maldives :

அதிகபடியான  எண்ணிக்கையில் சுற்றலா பயணிகளை அனுப்பும் இந்தியாவுக்கு  அவர்கள் இதை செய்வது ஆச்சரியமாக உள்ளது. நாம் அண்டை நாடுகளுக்கு நல்லவர்கள் தான். ஆனால், ஏன் இப்படி ஒரு வெறுப்பை நாம் சகித்துக் கொள்ள வேண்டும்? நான் மாலத்தீவுக்கு பலமுறை சென்றிருக்கிறேன்.

ஆனால் கண்ணியம்தான் முதன்மையானது. இந்திய தீவுகளுக்கு சென்று நம் சொந்த சுற்றுலாவை ஆதரிப்போம்” என்றார். இதைத் தொடர்ந்து, சல்மான் கான் கூறுகையில், "”எங்கள் பிரதமர் மோடியை லட்சத்தீவின் அழகான, தூய்மையான மற்றும் பிரமிக்க வைக்கும் கடற்கரையில் பார்ப்பது மிகவும் அருமையாக இருந்தது. இதில், சிறந்த அம்சம் என்னவென்றால், அது எங்கள் இந்தியாவில் உள்ளது" என்றார். 

Boycott Maldives :

நடிகை ஷ்ரத்தா கபூர் கூறுகையில், "இந்த படங்கள் மற்றும் மீம்ஸ்கள் அனைத்தும்  பார்ப்பதன் மூலம் நான் மிஸ்ஸிக் அவுட் செய்ததாக நினைக்கிறேன். லட்சத்தீவு அழகிய கடற்கரைகளை கொண்டுள்ளது" என்றார். மேலும், சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது, "சிந்துதுர்க்கில் எனது 50வது பிறந்தநாள்  கொண்டாட்டம்.

இந்த கடற்கரை நாங்கள் நாம் விரும்பும் அனைத்தையும் வழங்கியது. மேலும் பல அற்புதமான விருந்தோம்பலுடன் கூடிய நினைவுகளின் பொக்கிஷத்தை எங்களிடம் விட்டுச் சென்றன. இந்தியா அழகான கடற்கரைகள் மற்றும் அழகிய தீவுகளால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. நமது  அதிதி தேவோ பவ தத்துவத்தின் மூலம், நாம் ஆராய்வதற்கு எவ்வளவோ இருக்கிறது. பல நினைவுகள் உருவாக்க காத்திருக்கின்றன” என்றார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM MK Stalin:
CM MK Stalin: "நான் திருப்தி அடையல" விழா மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்படி பேசியது ஏன்?
Group 4 Vacancies: குரூப் 4 காலி இடங்கள் மீண்டும் உயர்த்தப்படுமா? டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
Group 4 Vacancies: குரூப் 4 காலி இடங்கள் மீண்டும் உயர்த்தப்படுமா? டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
Home Loan Default: வீட்டுக் கடன் டீஃபால்ட் ஆகிவிட்டதா? கடனை அடைப்பது எப்படி? சொத்தை மீட்பதற்கான வழிகள்
Home Loan Default: வீட்டுக் கடன் டீஃபால்ட் ஆகிவிட்டதா? கடனை அடைப்பது எப்படி? சொத்தை மீட்பதற்கான வழிகள்
Delhi Ganesh:
Delhi Ganesh: "அஜித், விஜய் மாதிரி வரனும்னு நினைக்கனும்" நடிகர்களுக்கு டெல்லி கணேஷ் தந்த ஆலோசனை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Salem Doctor fight | Govi Chezhian | ஓரங்கட்டப்பட்ட கோவி செழியன்? Udhayanidhi கொடுத்த வார்னிங்! தஞ்சை திமுக பரபரப்புSalem Prisoner Attacks Police : ’’எனக்கு சிகரெட் வேணும்’’போலீஸை அடிக்க பாய்ந்த கைதி..Gujarat Car Funeral Ceremony : ’லக்கி’ காருக்கு இறுதிச்சடங்கு! வியக்க வைத்த விவசாயி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM MK Stalin:
CM MK Stalin: "நான் திருப்தி அடையல" விழா மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்படி பேசியது ஏன்?
Group 4 Vacancies: குரூப் 4 காலி இடங்கள் மீண்டும் உயர்த்தப்படுமா? டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
Group 4 Vacancies: குரூப் 4 காலி இடங்கள் மீண்டும் உயர்த்தப்படுமா? டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
Home Loan Default: வீட்டுக் கடன் டீஃபால்ட் ஆகிவிட்டதா? கடனை அடைப்பது எப்படி? சொத்தை மீட்பதற்கான வழிகள்
Home Loan Default: வீட்டுக் கடன் டீஃபால்ட் ஆகிவிட்டதா? கடனை அடைப்பது எப்படி? சொத்தை மீட்பதற்கான வழிகள்
Delhi Ganesh:
Delhi Ganesh: "அஜித், விஜய் மாதிரி வரனும்னு நினைக்கனும்" நடிகர்களுக்கு டெல்லி கணேஷ் தந்த ஆலோசனை!
Indira Soundararajan: அடுத்த அதிர்ச்சி; எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் திடீர் மறைவு- என்ன ஆச்சு?
Indira Soundararajan: அடுத்த அதிர்ச்சி; எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் திடீர் மறைவு- என்ன ஆச்சு?
Kasturi: எஸ்கேப்! சர்ச்சைப் பேச்சால் நடிகை கஸ்தூரி தலைமறைவு - வலைவீசி தேடும் போலீஸ்!
Kasturi: எஸ்கேப்! சர்ச்சைப் பேச்சால் நடிகை கஸ்தூரி தலைமறைவு - வலைவீசி தேடும் போலீஸ்!
Teachers Protest: 'முதல்வர் ஸ்டாலினுக்கு 2026-ல் பாடம் புகட்டுவோம்'- ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சூளுரை!- பின்னணி இதுதான்!
Teachers Protest: 'முதல்வர் ஸ்டாலினுக்கு 2026-ல் பாடம் புகட்டுவோம்'- ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சூளுரை!- பின்னணி இதுதான்!
இரவு உணவை எப்போது சாப்பிட வேண்டும்? நிபுணர்கள் சொல்வது என்ன தெரியுமா?
இரவு உணவை எப்போது சாப்பிட வேண்டும்? நிபுணர்கள் சொல்வது என்ன தெரியுமா?
Embed widget