ரயில் தண்டவாளத்தில் குறுக்கே வந்த யானை.. திக் திக் நிமிடங்கள்.. வைரலாகும் வீடியோ..!
ரயில் பாதையை கடக்கு யானைகள் வந்தப் போது ரயில் ஓட்டுநர்கள் செய்த செயல் அனைவரிடமும் பாராட்டை பெற்று வருகிறது.
பொதுவாக ரயில் பாதையில் கடக்க முயன்றபோது பல விலங்குகள் ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்த செய்தியை நாம் அதிகம் கேட்டுள்ளோம். இதற்கு முக்கிய காரணம் சில பாதைகள் கட்டுப்பகுதி வழியே செல்வது தான். அந்த செய்திகளுக்கு மாறாக தற்போது இரு ரயில் ஓட்டுநர்களின் துரித செயலால் யானைகள் விபத்தில் சிக்காமல் காப்பாற்றப்பட்டுள்ளன. அப்படி அவர்கள் என்ன செய்தார்கள்? எப்படி யானையை காப்பாற்றினர்?
மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு பகுதியான ஜல்பாய்குரியில் அமைந்துள்ள ரயில் பாதையை நேற்று சில யானைகள் கடந்து சென்றுள்ளன. அப்போது கஞ்சன் கன்யா என்ற எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் அந்த வழியே வந்துள்ளது. சரியாம மாலை 5.45 மணிக்கு அந்த இடத்திற்கு வந்து கொண்டிருந்த போது யானைகள் ரயில் தண்டவாளத்தை கடப்பதை பார்த்துள்ளனர். இதைத் தொடர்ந்து அந்த ரயிலின் ஓட்டுநர்கள் டி துரை மற்றும் குமார் ஆகிய இருவரும் துரிதமாக செயல்பட்டு அவசர அவசரமாக எமெர்ஜென்சி பிரேக்கை அழுத்தியுள்ளனர்.
While working 03150Dn KanchanKanya Exp spl at 17.45 hrs today, Alert LP Sri D.Dorai & ALP Sri P. Kumar noticed One Tusker adjacent to track at KM 72/1 between Nagrakata-Chalsa & applied Emergency brake to control the train & save it. @RailNf@RailMinIndia @wti_org_india pic.twitter.com/TVyXt8HY9H
— DRM APDJ (@drm_apdj) August 25, 2021
இதனால் ரயில் சரியான நேரத்தில் யானையின் மேல் மோதாமல் நின்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்றை அலிபுர்துவார் பகுதியின் ரயில்வே கோட்டத்தின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் எவ்வளவு ஆபத்தாக யானைகள் ரயில் பாதையை கடப்பது பதிவாகியுள்ளது. அத்துடன் ரயிலின் ஓட்டுநர்கள் துரிதமாக செயல்பட்டு ரயிலை நிறுத்தியதும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை பலரும் பார்த்து ரயில் ஓட்டுநர்களின் செயலை பாராட்டி வருகின்றனர். குறிப்பாக அவசரமாக செயல்பட்ட இந்த இரண்டு ஓட்டுநர்களுக்கு மிகுந்த பாராட்டுகளை தெரிவிக்கவேண்டும் என்று பலரும் கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.
That's a commendable job. Thanks a lot. I am from Alipurduar so I still remember the accident where many elephants died. Actually, it was happing quite often then. But now the situation has completely changed. Great Job Sir 🙏
— Amar Bahadur Chhetri (@AamarBChhetri) August 25, 2021
Excellent & many wishes to the entire team especially pilot who took the immediate response 🎉🎉🎉
— Soundhiriyan P V (@soundhiriyan_pv) August 26, 2021
அலிபுர்துவார் பகுதியில் அடிக்கடி சில விலங்குகள் இந்த ரயில் பாதையில் விபத்தில் சிக்கி வருவது வழக்கமாகி வருகிறது. அதிலிருந்து தற்போது இந்த யானைகள் காப்பாற்றப்பட்டுள்ள செய்தி அப்பகுதி மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: மணமகளே மணமகளே வா வா.. இனி இல்லை: வா... வந்து வண்டில ஏறு... மணமகனை காரில் அழைத்துச் சென்ற மணமகள்!