(Source: ECI/ABP News/ABP Majha)
ChatGPT உதவியுடன் சீஸி பொடேடோ அண்ட் வெஜிடபிள்ஸ் பேக் ரெசிபியை செய்த இளைஞர்
ChatGPT உதவியுடன் இளைஞர் ஒருவர் மீந்துபோன உணவைக் கொண்டு நல்ல சுவையான பதார்த்தம் செய்து சாப்பிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ChatGPT உதவியுடன் இளைஞர் ஒருவர் மீந்துபோன உணவைக் கொண்டு நல்ல சுவையான பதார்த்தம் செய்து சாப்பிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ChatGPT என்பது ஒரு செயற்கை நுண்ணறிவு (ஏ. அ) சார்ந்த அரட்டை மென்பொருள். மனிதர்கள் போலவே மனிதர்களுடன் உரையாடக்கூடிய ஆற்றலை இந்த மென்பொருள் பெற்றிருக்கிறது. இதனுடன் அரட்டை வடிவில் உரையாடும் போது கேள்விகளுக்கு பதில் சொல்லும் திறன் பெற்றிருக்கிறது
ChatGPT பயன்பாட்டை கூகுள் கில்லர் எனவும் கூகுளுக்கு இணை மாற்று வந்து விட்டது எனவும் சிலர் குறிப்பிடுகின்றனர். நீங்கள் எது தொடர்பான கேள்வியை எழுப்பினாலும் சாட்ஜிபிடி அதற்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக பதிலளிக்கும். ChatGPT என்பது OpenAI மூலம் நவம்பர் 2022 இல் தொடங்கப்பட்ட பயன்பாடு ஆகும். நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு இது செயற்கை நுண்ணறிவு மூலம் விரைவாக பதில் சொல்லும். ChatGPT என்பது "ஜெனரேட்டிவ் ப்ரீ-ட்ரெய்னிங் டிரான்ஸ்ஃபார்மர்" என்ற தொழில்நுட்பத்தை குறிக்கிறது.
இது அறிமுகம் செய்யப்பட்ட சில வாரங்களிலேயே பல கோடி ஃபாலோயர்களைப் பெற்றுவிட்டது. இதனை தரவிறக்கம் செய்வோரின் எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் விநாடிக்கு விநாடி அதிகரிக்கிறது என்றால் அது மிகையல்ல.
இந்நிலையில் ChatGPT உதவியுடன் இளைஞர் ஒருவர் மீந்துபோன உணவைக் கொண்டு நல்ல சுவையான பதார்த்தம் செய்து சாப்பிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சுபம் ஜோஷி என்ற இளைஞர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் தன்னிடம் மீதமிருந்த உருளைக்கிழக்கு, தக்காளி, வெங்காயம், சில வாசனைப் பொருட்கள், பிரெட், சீஸ், உப்பு, மிளகு, பால் கொண்டு என்ன உணவு செய்யலாம் என்று ChatGPTயிடம் கேட்கிறார். அந்த ChatGPT அவருக்கு சீஸி பொடேடோ அண்ட் வெஜிடபிள்ஸ் பேக் என்ற ஒரு உணவை பரிந்துரைக்கிறது. அது மட்டுமல்லாது "cheesy potato and vegetable bake" செய்வது எப்படி என்றும் சொல்லிக் கொடுக்கிறது. ஓவனை 180 டிகிரி ப்ரீ ஹீட் செய்துவிட்டு செய்முறையை ஆரம்பிக்க வேண்டும் என்பது தொடங்கி சிறு பிள்ளைக்கு விளக்குவது போல் விளக்க அந்த இளைஞர் எளிதாக அந்த டிஷ்ஷை செய்து விடுகிறார். ChatGPT வழிகாட்டுதலின்படி அந்த டிஷ் சிறப்பாக வந்துவிட அவர் அதை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
ஆனால் கூகுளை விஞ்சும் வரங்களைத் தந்தாலும் சாட்ஜிபிடிக்கு பல்வேறு பள்ளிகளும், பல்கலைக்கழகங்களும் தடை விதித்துள்ளன. தேர்வுகள், பணிகள் மற்றும் ஆய்வக சோதனைகளுக்கு AI கருவியை மாணவர்கள் பயன்படுத்தியை அடுத்து, பெங்களூரு பல்கலைக்கழகம் சாட்ஜிபிடிக்கு தடை விதித்துள்ளது. நியூயார்க் நகரப் பள்ளிகள் மற்றும் நியூயார்க் பொதுப் பள்ளிகள் முன்னதாகவே சாட்ஜிபிடி பயன்பாட்டை தடை செய்தது. ChatGPT போன்ற ஏஐ கருவிகள் மாணவர்களின் விமர்சன சிந்தனை மற்றும் படைப்பாற்றலை குறைக்கிறது போன்ற குற்றச்சாட்டுகள் தடைகளுக்கு காரணமாக முன்வைக்கப்படுகிறது.
வீடியோவைக் காண:
View this post on Instagram