Woman Hitting Cab Driver: நடுரோட்டில் கார் ட்ரைவரை சரமாரியாக அறைந்த பெண்... வைரல் வீடியோ!
வன்முறை எந்த வடிவத்தில் வந்தாலும் அது கண்டனத்துக்குரியது என்று ட்விட்டர் பயனாளிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ மாவட்டம் அவாத் பகுதியில் உள்ள சாலையில் பெண் ஒருவர் கேப் ஓட்டுனரை அறையும் வீடியோ காட்சி ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
ட்விட்டரில் பகிரப்பட்ட அந்த வீடியோ காட்சியில், சாலையின் நடுப்பகுதியில் இருந்து கொண்டு பெண் ஒருவர் கேப் டிரைவரை மூர்க்கத்தனமாக பலமுறை அறைந்தார். போக்குவரத்து காவலர் கண்ணுக்கு முன்பே, இத்தகைய வன்முறை சம்பவம் நடைபெற்றது . இதனை நேரில் பார்த்த மற்ற சாலை பயனாளிகள் செய்வதறியாது வேடிக்கைப் பார்த்தனர்.
Viral Video: A Girl Continuously Beating a Man (Driver of Car) at Awadh Crossing, Lucknow, UP and allegedly Damaging his Phone inspite of him asking for Reason pic.twitter.com/mMH7BE0wu1
— Megh Updates 🚨 (@MeghUpdates) July 31, 2021
இந்த வீடியோ சமூக ஊடங்களில் பேசும் பொருளாகி உள்ளது. #ArrestLucknowGirl என்ற டேக்-ஐ பயன்படுத்தி தவறு செய்த பெண்ணை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.
வன்முறை எந்த வடிவத்தில் வந்தாலும் அது கண்டனத்துக்குரியது என்று ட்விட்டர் பயனாளிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
As a woman I'm shocked to witness such blatant and brazen behaviour.#ArrestLucknowGirl
— Niishitaa (@SinghviNishita) August 2, 2021
Gender shouldn't be a hindrance here. Interrogate and if required arrest such person regardless of gender. No one has the right to behave with such hatered towards the other person.
This is unacceptable, the women has no right to physically assault anyone, police should take action on this women.#ArrestLucknowGirl https://t.co/1JFwKJk8gf
— Kartikey Dwivedi (@Kartike27824248) August 2, 2021
I've seen the complete video and it was clearly seen that girl was beating up the cab driver in middle of the road, irrespective of the reason. Now police filed a complaint against that cab driver.
— Shalini Gupta🇮🇳 (@shalini2305) August 2, 2021
Strange!#ArrestLucknowGirl pic.twitter.com/Nspvij0X4p
பெண்ணின் செல்போனை டிரைவர் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்த செயல் அடிப்படை மனித உரிமை மீறல். காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும் அதற்கு இது சரியான பதிலாகாது என்றும் தெரிவிக்கின்றனர்.